சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் தாக்கி விவசாயி உயிரிழந்த சம்பவத்திற்கு கடும் கண்டனம்.. விஜயகாந்த் பரபரப்பு அறிக்கை.!! 
                                    
                                    
                                   vijayakanth statement on june 23
 
                                 
                               
                                
                                      
                                            சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் தாக்கி விவசாயி உயிரிழந்த சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள இடையப்பட்டி கிராமத்தை சேர்ந்த விவசாயி முருகேசன் என்பவரை  சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் பெரியசாமி தாக்கியதில் பரிதாபமாக உயிரிழந்தார். இது கண்டனத்துக்குரிய செயல்.
 தமிழகத்தில் ஏழை எளிய மக்கள் மீது காவல்துறையினர் வன்முறையை கட்டவிழ்த்து விடுவது  தொடர் கதையாகி வருகிறது. மக்களுக்கு பாதுகாப்பு அரணாக இருக்க வேண்டிய காவலர்களே, மக்களின் உயிரை பறிப்பது எந்த விதத்தில் நியாயம்? 
 உயிரை பறிக்கும் வகையில் காவலர்கள் நடந்து கொள்வது என்பது, மனிதாபிமானத்திற்கு முற்றிலும் ஒரு கேள்விக்குறியாக மாறிவிடும்.  காவலர்கள் தாக்கி உயிரிழக்கும் சம்பவம் இதுவே இறுதியாக இருக்கட்டும். 
ஏழை எளிய மக்கள் மீது தாக்குதல் நடத்துவதை காவலர்கள் முதலில் நிறுத்தி கொள்ள வேண்டும். இது போன்ற நிகழ்வுகள் இனி எங்கும் நடக்காமல் இருக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், விவசாயி முருகேசன் உயிரிழப்புக்கு காரணமான காவலர்களுக்கு கடும் தண்டனை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
 உயிரிழந்த முருகேசனின் குடும்பத்திற்கு அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
                                     
                                 
                   
                       English Summary
                       vijayakanth statement on june 23