துயரத்தை நேரில் அணைக்க தயாராகும் விஜய்...! - டி.ஜி.பி. அலுவலகத்தில் த.வெ.க. மனு
Vijay ready to extinguish sorrow person TVK petition at DGP office
கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த 27ஆம் தேதி நடைபெற்ற தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய்யின் பிரசார கூட்டம், பெரும் துயரச் சம்பவமாக மாறி நாட்டையே உலுக்கியது.அந்த கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்து, 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இந்த நிகழ்வுக்குப் பிறகு, பாதிக்கப்பட்ட குடும்பங்களை விஜய் நேரில் சந்திக்கவில்லை என்பதால், சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்பு, கண்டன அலை எழுந்தது.இந்நிலையில், துயரத்தில் வாடும் குடும்பங்களுடன் வீடியோ கால் வழியாக விஜய் பேசினார்.அப்போது அவர்,"இது ஈடு செய்ய முடியாத இழப்பு.

இதற்காக நான் ஆழ்ந்த வருத்தம் தெரிவிக்கிறேன்.உங்கள் குடும்பத்துக்கு தேவையான அனைத்து உதவிகளையும் தமிழக வெற்றிக்கழகம் செய்து தரும்.விரைவில் நான் நேரில் வந்து உங்களைச் சந்திக்கிறேன்" என்று தெரிவித்ததாக கட்சித் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப்போது அந்த வாக்குறுதியை நிறைவேற்ற விஜய் கரூர் பயணத்திற்கு தயாராகி வருகிறார்.மேலும், கரூர் துயரத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவிக்க, விஜய் விரைவில் செல்வதாக தகவல்கள் உறுதிப்படுத்துகின்றன.
இதற்கிடையில், விஜய் வருகைக்கு பாதுகாப்பு ஏற்பாடுகளை வலியுறுத்தி, தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் டி.ஜி.பி. அலுவலகத்தில் இன்று மனு அளிக்கவுள்ளனர்.ஏற்கனவே நேற்று மின்னஞ்சல் மூலம் மனு அனுப்பியிருந்த நிலையில், இன்று நேரில் மனு சமர்ப்பிக்க கட்சியின் கொ.ப.செ. அருண்ராஜ் தலைமையிலான குழு செல்வதாக தெரிவிக்கப்படுகிறது.
English Summary
Vijay ready to extinguish sorrow person TVK petition at DGP office