வேடிக்கை ! 41 பேரின் மரணத்திற்கு விஜய் எந்தப் பொறுப்பையும் ஏற்கவில்லை!- சீமான் குற்றச்சாட்டு
Vijay not accept any responsibility deaths 41 people Seemans accusation
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பத்திரிக்கையாளர்களைச் சந்தித்து பல்வேறு கருத்துகளைத் தெரிவித்துள்ளார். அப்போது அவர் தெரிவித்ததாவது,"தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு நடந்தபோது பா.ஜ.க.வின் உண்மை கண்டறியும் குழு எங்கே இருந்தது?” என்று சீமான் கேள்வி எழுப்பினார்.அந்த சம்பவத்தை டி.வி.யில் தான் பார்த்து தெரிந்து கொண்டேன் என்றார் எடப்பாடி பழனிசாமி.
இது அரசியலின் வேடிக்கை அல்லவா? எனவும் சாடினார்.தேர்தல் நெருங்கியதால் தான் பா.ஜ.க. எம்.பி.க்கள் குழு கரூர் வந்துள்ளது என்று விமர்சித்தார்.துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக தி.மு.க. அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஏன்? என்று கேள்வியெழுப்பினார்.

ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து நடந்த போராட்டம், சாதாரண போராட்டமல்ல... அது மக்கள் புரட்சி! என்று வலியுறுத்தினார்.கரூரில் 41 பேர் உயிரிழந்த சம்பவத்தை குறித்தும் சீமான் கருத்து தெரிவித்தார். அந்த நிகழ்வுக்கு முதல் காரணம் த.வெ.க. தலைவர் விஜயே. உயிரிழந்த 41 பேருக்கு அவர் எந்தப் பொறுப்பையும் ஏற்கவில்லை என்று குற்றஞ்சாட்டினார்.
மேலும், விஜய், தனது பேச்சை காவல்துறையினருக்கு நன்றி தெரிவித்து தொடங்கியிருப்பது வருத்தத்துக்குரியது என்றும் தெரிவித்தார்.இந்த முறை இஸ்லாமியர், கிறிஸ்தவர் சமூக வாக்குகளை யாரும் எளிதில் எடுத்துச் செல்ல முடியாது என்றார்.இறுதியாக, எங்களுக்கு ஒருமுறை, 5 ஆண்டுகள் வாய்ப்பு கொடுங்கள். மக்களின் கருத்துகளை கேட்டு, அவர்களின் உரிமைகளை காக்கும் அரசை அமைப்போம் என்று மக்களிடம் வலியுறுத்தினார்.
English Summary
Vijay not accept any responsibility deaths 41 people Seemans accusation