நடிகர் விஜய்யின் அதிரடி நகர்வு! ஆடிப்போன அரசியல் களம்! வெளியானது அடுத்த அறிவிப்பு!! - Seithipunal
Seithipunal


தமிழ் திரை உலகின் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் விஜய் தனது அரசியல் பயணத்தை கூடிய விரைவில் தொடங்குவார் என பரவலாக பேசப்பட்டு வருகிறது. அவருக்கு ஏற்றார் போல் தனது ரசிகர் மன்றம் மூலம் பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வரும் நடிகர் விஜயின் அரசியல் என்று கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ளது. 

அகில இந்திய தளபதி மக்கள் மக்கள் இயக்கத்தை அரசியல் இயக்கமாக மாற்றி எதிர்வரும் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற பொது தேர்தலில் விஜய் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படும் நிலையில் அதற்கு அடித்தளம் அமைக்கும் பணிகளை நடிகர் விஜய் தொடங்கிவிட்டார்.

தளபதி மக்கள் இயக்கத்தின் பொதுச்செயலாளர் பூஸ்ஜி ஆனந்த் மூலம் ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வரும் அவர் மறைந்த தலைவர்களின் நினைவு நாள் மற்றும் பிறந்தநாளுக்கு மாலை அணிவிப்பது மரியாதை செலுத்துவது நலத்திட்ட உதவிகளை வழங்குவது என அடுத்தடுத்து தனது அரசியல் அடிகளை மெல்ல மெல்ல எடுத்து வைத்து வருகிறார். 

லட்சக்கணக்கான விஜய் ரசிகர்கள் அண்ணன் விஜய் எப்போது அரசியலுக்கு வருவார் என ஆவலோடு எதிர்பார்த்து காத்திருந்த வேளையில் அரசியல் கட்சி போன்று பல்வேறு அணிளை உருவாக்கி மாவட்ட நிர்வாகிகளுடன் சென்னை பனையூரில் ஆலோசனை நடத்தினார். மேலும் இலவச இரவு பள்ளிகளையும் ஆரம்பித்தார். 

அதனை தொடர்ந்து தற்போது இலவச சட்ட ஆலோசனை மையத்தை தொடங்கியுள்ளார். சென்னை கொடுங்கையூரில் விஜய் மக்கள் இயக்கத்தின் முதல் இலவச சட்ட ஆலோசனை மையத்தை புஸ்ஸி ஆனந்த் இன்று திறந்து வைத்தார். பிறகு செய்திகளை சந்தித்த அவர் "விஜய் மக்கள் இயக்கம் சார்பில் வரும் 15 ஆம் தேதி, 100 ஆட்டோ ஓட்டுநர்களுக்கு காக்கி சட்டையும், 100 குடும்பங்களுக்கு மளிகை பொருட்கள் மற்றும் 300 பேருக்கு இரவு உணவு வழங்கபட உள்ளது" என அறிவித்துள்ளார். நடிகர் விஜயின் அதிரடி நகர்வுகளால் அரசியல் களம் ஆட்டம் கண்டுள்ளது.  


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Vijay makkal iyakkam announced welfare assistance provided to auto drivers


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->