விஜய்க்கு 80 தொகுதிகள் வெற்றி வாய்ப்பு? — ரகசிய சர்வே தகவல்! அப்போ திமுக கதி? சூடுபிடிக்கும் அரசியல் களம்!
Vijay has a chance of winning 80 seats Secret survey information So what about DMK The political arena is heating up
தமிழக அரசியலில் விஜய் அறிமுகமானது முதல் தவெக வளர்ச்சி குறித்து பல ரகசிய சர்வேக்கள் வெளியானதாக தகவல்கள் வருகின்றன. சமீபத்தில் வெளியான ஒரு ரகசிய சர்வேயில், தவெக தலைவர் விஜய்க்கு மாநிலம் முழுவதும் 40% அளவில் மக்கள் ஆதரவு இருப்பதாகவும், வரவிருக்கும் 2026 தேர்தலில் எந்த கூட்டணிக்கும் முழு பெரும்பான்மை கிடைக்காது என்றும் கூறப்பட்டுள்ளது.
இந்த சர்வேயின்படி, தவெக கட்சி சுமார் 80 தொகுதிகளில் வெற்றி பெறும் வாய்ப்பு கொண்டிருப்பதாகவும், குறிப்பாக சோழிங்கநல்லூர், திருவள்ளூர், சேப்பாக்கம்–திருவல்லிக்கேணி போன்ற நகர்ப்புற தொகுதிகளில் விஜய்க்கு 50% வாக்குகள் கிடைக்கும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. இதில் பெண்களின் ஆதரவு 60% வரை உயர்ந்துள்ளதாகவும் சர்வே கூறுகிறது.
அதேபோல் மற்றொரு ரகசிய சர்வேயில், திருச்சி கிழக்கு, மதுரை மேற்கு, திருவாடானை போன்ற தொகுதிகளில் தவெக மிகப்பெரிய வெற்றி பெறும் என கணிக்கப்பட்டுள்ளது. விஜயின் ரசிகர் வட்டம் அதிகம் உள்ள பகுதிகளில் 60% வாக்குகள் வரை கிடைக்கக்கூடும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த சர்வே தகவல்கள் தவெக அணியை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளன. செங்கோட்டையன் போன்ற சீனியர்கள் இணைந்ததால் கட்சியின் வலிமை அதிகரித்துள்ளதாகவும், பிரச்சாரம் தொடங்கினால் இந்த எண்ணிக்கை மேலும் உயரும் என்றும் தவெகவினர் நம்புகின்றனர்.
ஆனால் அரசியல் நிபுணர்கள் இந்த சர்வே முடிவுகளை சந்தேகத்துடன் பார்க்கின்றனர். விஜயால் வாக்கு சிதறல் ஏற்படும் என்பது உண்மை என்றாலும், 80 தொகுதிகளில் வெற்றி பெறுவது மிகைப்படுத்தப்பட்ட கணிப்பு என்று அவர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். “ஒரு தொகுதியில் வெற்றியடைவதற்கே பெரும் சவால்கள் உள்ளன; ரகசிய சர்வேக்கள் என்கிறால் ஆதாரம் வெளியிடப்பட வேண்டும்” என அவர்கள் வலியுறுத்துகின்றனர்.
விஜயின் அரசியல் பயணம் எவ்வாறு அமைவது, தவெக உண்மையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துமா என்பது 2026 தேர்தல் முடிவுகளே தீர்மானிக்கவுள்ளது.
English Summary
Vijay has a chance of winning 80 seats Secret survey information So what about DMK The political arena is heating up