விஜய் அரசின் முதல் அதிரடி...! மே மாத உரிமைத்தொகை விடுவிப்பு...! - உற்சாகத்தில் மகளிர்...!
Vijay government first action May entitlement release Women excitement
சட்டப்பேரவைத் தேர்தலில் 2021ஆம் ஆண்டு நடைபெற்ற மகளிர் முன்னேற்றத்தை மையமாகக் கொண்டு திமுக முக்கிய வாக்குறுதியாக மாதந்தோறும் பெண்களுக்கு ரூ.1,000 உரிமைத்தொகை வழங்கப்படும் என அறிவித்திருந்தது.
அதனைத் தொடர்ந்து ஆட்சிப் பொறுப்பேற்ற இரண்டாவது ஆண்டில், 2023 செப்டம்பர் 15ஆம் தேதி முதல் மகளிர் உரிமைத்தொகை திட்டம் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டது.

இந்தத் திட்டத்தின் கீழ் மாநிலம் முழுவதும் 1 கோடியே 31 லட்சம் பெண்கள் பயனாளிகளாகத் தேர்வு செய்யப்பட்டு, ஒவ்வொரு மாதமும் 15ஆம் தேதி அவர்களது வங்கி கணக்குகளில் தலா ரூ.1,000 நேரடியாக செலுத்தப்பட்டு வருகிறது.
இதற்கிடையில், சமீபத்தில் நிறைவடைந்த சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய் தலைமையிலான தவெக மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்து ஆட்சியை கைப்பற்றியது.
புதிய அரசு பொறுப்பேற்ற பின்னரும் மகளிர் நலத் திட்டங்கள் தொடரும் என உறுதியளிக்கப்பட்டிருந்த நிலையில், மே மாதத்திற்கான உரிமைத்தொகையும் வழக்கம்போல் இன்று காலை பயனாளிகளின் வங்கி கணக்குகளில் வரவு வைக்கப்பட்டுள்ளது.
அதன்படி, 1 கோடியே 31 லட்சம் பெண் பயனாளர்களுக்கு தலா ரூ.1,000 வழங்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. “மகளிர் உரிமைத்தொகை எந்த சூழலிலும் நிறுத்தப்படாது” என்று முதல்-அமைச்சர் விஜய் நேற்று அறிவித்திருந்த நிலையில், இன்று அதற்கான நிதி பரிமாற்றம் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதற்கு முன்பாகவே, அரசு பள்ளிகளில் கல்வி பயின்று உயர்கல்வியை தொடர்ந்து வரும் மாணவிகளுக்கான “புதுமைப் பெண்” திட்டம் மற்றும் மாணவர்களுக்கான “தமிழ் புதல்வன்” திட்டத்தின் கீழ் தலா ரூ.1,000 உதவித்தொகையும் மாணவ-மாணவியரின் வங்கி கணக்குகளில் தவெக அரசால் நேற்று வரவு வைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
English Summary
Vijay government first action May entitlement release Women excitement