மகளிர் அணியினருக்கு புதிய உத்தரவு! நடிகர் விஜய்யின் மாஸ்டர் பிளான்! - Seithipunal
Seithipunal


நடிகர் விஜயின் மக்கள் இயக்க மகளிர் அணி நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் சென்னை பனையூரில் உள்ள அந்த இயக்கத்தின் தலைமை அலுவலகத்தில் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் நடைபெற்று வருகிறது. நடிகர் விஜயின் உத்தரவின் பெயரில் இன்று காலை 11 மணியளவில் பனையூரில் உள்ள தலைமை அலுவலகத்தில் தொடங்கியது. அப்போது மக்கள் விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் சில முக்கிய ஆலோசனைகளை மகளிர் அணி நிர்வாகிகளுக்கு வழங்கியுள்ளார். 

குறிப்பாக மகளிர் அணியின் செயல்பாடுகள் எவ்வாறு இருக்க வேண்டும், பொது பிரச்சனை மற்றும் பெண்கள் சார்ந்த பிரச்சனைகளை தெரிந்து கொண்டு அதற்கேற்ப தீர்வு காணும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.  வாக்காளர் திருத்தம் மற்றும் சேர்கை நடைபெறும் போது ஒவ்வொரு முறையும் எவ்வளவு வாக்காளர்கள் இருக்கிறார்கள் என்பதை சேகரித்து அனுப்ப வேண்டும்.

மகளிர் அணி நிர்வாகிகள் உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் வகையில் செயல்பட வேண்டும். அதற்காக மாதம் ஒருமுறை உறுப்பினர் சேர்க்கை முகாம் நடத்த வேண்டும். குறிப்பாக கல்லூரி மாணவிகள் உதவியுடன் மகளிர் அணி உறுப்பினர் சேர்க்கை நடத்த வேண்டும் என பல்வேறு ஆலோசனைகளை பொதுச் செயலாளர் ஆனந்த் வழங்கியுள்ளார். இந்தக் கூட்டம் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுமார் 1500 க்கும் மேற்பட்ட மகளிர் அணி நிர்வாகிகள் கலந்து கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Vijay directed women wing to conduct membership enrollment every month


கருத்துக் கணிப்பு

கள்ளக்குறிச்சி கள்ளசாராயக்குறிச்சியாக மாறியதற்கு காரணம் ?Advertisement

கருத்துக் கணிப்பு

கள்ளக்குறிச்சி கள்ளசாராயக்குறிச்சியாக மாறியதற்கு காரணம் ?
Seithipunal
--> -->