அடுத்த #அதிரடி கிளப்பிய நடிகர் விஜய்.. பறந்த உத்தரவு.. பரபரப்பான விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள்.! - Seithipunal
Seithipunal


விஜய் மக்கள் இயக்கத்தின் நடவடிக்கைகள் நாளுக்கு நாள் அது அரசியல் கட்சியாக மாறுகின்றதோ என்ற சந்தேகத்தை எழுப்பி வருகின்றது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து வருபவர் தான் நடிகர் விஜய். இவரது ரசிகர்களின் சார்பில் விஜய் மக்கள் இயக்கம் இயங்கி வருகிறது. இந்த விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில் அவரது பிறந்த நாள் போன்ற நிகழ்வுகளின் போது தமிழகம் முழுவதும் பல்வேறு நலத்திட்ட பணிகளை ரசிகர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த ஏப்ரல் 14ஆம் தேதி அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு விஜய் மக்கள் இயக்கத்தினர் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். இது நடிகர் விஜய் அரசியலில் கால் பதிப்பதற்கான முதல் படி என்று கூறப்பட்டது.

இதையடுத்து, தற்போது அடுத்த கட்ட தகவல் வெளியாகி அதை உறுதி செய்யும் விதமாக அமைந்துள்ளது. அதன்படி, தொகுதி வாரியாக இருக்கும் வாக்காளர்களின் புள்ளி விவரத்தை சேகரித்து அனுப்பச் சொல்லி விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளுக்கு விஜய் தரப்பிலிருந்து ஆணை பிறப்பிக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. அந்தந்த மாவட்ட செயலாளர்கள் மற்றும் மாவட்ட தலைவர்களுக்கு இது குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாம்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Vijay Collect Voters Details


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->