'வெற்றி உறுதி...மீண்டும் அவர் அமைச்சராவார்'...! - அன்பில் மகேஷ் குறித்து உதயநிதி ஸ்டாலின் பரபரப்பு பேச்சு
Victory assured he minister again Udhayanidhi Stalin sensational speech about Anbil Mahesh
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் வருகிற 23-ந்தேதி நடைபெற உள்ள நிலையில், அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. இந்தத் தேர்தலில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர் கட்சி மற்றும் தவெக ஆகியவை மும்முரமாக களம் இறங்கியுள்ளதால், 4 முனைப் போட்டி தீவிரமடைந்துள்ளது. இதனை முன்னிட்டு வேட்பாளர்கள் வீதியிலிருந்து வீதிக்கு சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும், கட்சி தலைவர்களும் முக்கிய நிர்வாகிகளும் சூறாவளி வேகத்தில் பிரசாரம் செய்து வருகின்றனர்.திருச்சி மாவட்டம் திருவெரும்பூர் தொகுதியில் திமுக வேட்பாளராக போட்டியிடும் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு ஆதரவாக, துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் காட்டூர் பகுதியில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார்.
அப்போது அவர் உரையாற்றியபோது, அன்பில் மகேஷ் இந்தத் தொகுதியில் வெற்றி பெற்றால் மீண்டும் அமைச்சராகப் பொறுப்பேற்பார் என்றும், பள்ளிக் கல்வி துறையில் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதிலும், மாணவர்களின் இடைநிற்றலை குறைப்பதிலும் அவர் தீவிரமாக செயல்பட்டுள்ளார் என்றும் தெரிவித்தார்.
English Summary
Victory assured he minister again Udhayanidhi Stalin sensational speech about Anbil Mahesh