'ஜனநாயகன்' லீக் விவகாரம்...! - சைபர் கிரைம் காவலர்கள் அதிரடி நடவடிக்கை...!
jananayagan leak affair Cybercrime police take action
தவெக தலைவரும், நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள “ஜனநாயகன்” திரைப்படம் இணையத்தில் சட்டவிரோதமாக கசிந்தது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. நாடு முழுவதும் இந்த விவகாரம் பெரும் பேசுபொருளாக மாறியுள்ள நிலையில், சினிமா துறையினரும் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக புகார் அளித்ததைத் தொடர்ந்து, தமிழ்நாடு சைபர் கிரைம் காவலர்கள் அதிரடி நடவடிக்கையில் இறங்கியுள்ளனர்.
கசிந்த திரைப்படத்தை பகிர்ந்த இணையதளங்கள் மற்றும் சமூக வலைதளப் பக்கங்கள் உடனடியாக முடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், டெலிகிராம் உள்ளிட்ட பல்வேறு தளங்களில் பரவியிருந்த ‘ஜனநாயகன்’ திரைப்பட இணைப்புகளும் நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த சட்டவிரோத கசிவுக்கு காரணமான நபர்களை அடையாளம் காணும் பணியில் சைபர் கிரைம் காவலர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
English Summary
jananayagan leak affair Cybercrime police take action