''வணிகப் பயன்பாட்டுக்கான எல்பிஜி சிலிண்டர் விலை உயர்வை உடனடியாக திரும்பப் பெற வேண்டும்''; தி.வேல்முருகன்..! - Seithipunal
Seithipunal


''வணிகப் பயன்பாட்டுக்கான எல்பிஜி சிலிண்டர் விலை உயர்வை உடனடியாகவும் முழுமையாகவும் திரும்பப் பெற வேண்டும். வணிக எல்பிஜி சிலிண்டருக்கு நிலையான மானியம் வழங்குவதற்கான நிரந்தரத் திட்டத்தை மத்திய அரசு அறிவிக்க வேண்டும்.'' என்று தமிழக வாழ்வுரிமைக்கட்சி தலைவர் தி.வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிடுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;

''அரிசி, சமையல் எண்ணெய், உப்பு, சர்க்கரை, காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வால் ஏற்கெனவே கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு ஆளாகியுள்ள தமிழக மக்களின் மீது, வணிக பயன்பாட்டுக்கான எல்பிஜி சிலிண்டர் விலை உயர்வு மேலும் பல்வேறு சுமைகளைத் திணிக்கிறது.

வணிக சிலிண்டர் விலை உயர்வு ஓட்டல்கள், உணவகங்கள், தேநீர் கடைகள், பேக்கரிகள் உள்ளிட்ட சிறு மற்றும் குறு வணிகர்களின் செயல்பாட்டுச் செலவை அதிகரிக்கும். இதன் தொடர்ச்சியாக உணவு மற்றும் அத்தியாவசிய சேவைகளின் விலைகள் உயர்ந்து, இறுதியில் அதன் முழு சுமையும் பொதுமக்களின் தலையிலேயே விடியும்.

எனவே, வணிகப் பயன்பாட்டுக்கான எல்பிஜி சிலிண்டர் விலை உயர்வை உடனடியாகவும் முழுமையாகவும் திரும்பப் பெற வேண்டும். சிறு, குறு மற்றும் நடுத்தர வணிக நிறுவனங்களின் நலன் கருதி வணிக எல்பிஜி சிலிண்டருக்கு நிலையான மானியம் வழங்குவதற்கான நிரந்தரத் திட்டத்தை மத்திய அரசு அறிவிக்க வேண்டும்.

அரிசி, சமையல் எண்ணெய், உப்பு, சர்க்கரை, காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த அவசர விலைக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

விலைவாசி உயர்வால் பாதிக்கப்பட்டுள்ள ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் நியாயமான விலையில் கிடைப்பதை உறுதி செய்ய தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நூல் விலை உயர்வால் பாதிக்கப்பட்டுள்ள கைத்தறி மற்றும் விசைத்தறி நெசவாளர்களுக்கு இடைக்கால நிவாரண நிதியுதவி மற்றும் உற்பத்தி ஊக்கத்தொகை உடனடியாக வழங்க வேண்டும்.'' என்று தி.வேல்முருகன் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Velmurugan calls for immediate rollback of LPG cylinder price hike for commercial use


கருத்துக் கணிப்பு

முதல்வர் விஜய் தலைமையிலான இந்த 100 நாள் ஆட்சி...



Advertisement

கருத்துக் கணிப்பு

முதல்வர் விஜய் தலைமையிலான இந்த 100 நாள் ஆட்சி...


செய்திகள்



சினிமா

Seithipunal
--> -->