வேலூர் | கோட்டை மைதானத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று பிரசாரம்! பாதுகாப்பு பணிகள் தீவிரம்.! - Seithipunal
Seithipunal


வேலூர், கோட்டை மைதானத்தில் தி.மு.க சார்பில் இன்று மாலை 6 மணி அளவில் நடைபெற உள்ள பிரம்மாண்ட பொதுக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டு பேச உள்ளார். 

வேலூர் பாராளுமன்ற தொகுதி தி.மு.க வேட்பாளர் கதிர் ஆனந்த், அரக்கோணம் தொகுதி தி.மு.க வேட்பாளர் ஆகியோருக்கு வாக்கு சேகரிக்க உள்ளார். 

இந்த கூட்டத்திற்கு அமைச்சர் துரைமுருகன் தலைமை தாங்குகிறார். மேலும் அமைச்சர்கள் எ.வ. வேலு, ஆர். காந்தி, தேவராஜ் எம்.எல்.ஏ ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். 

இந்த கூட்டத்திற்கான ஏற்பாடுகளை வேலூர், அரக்கோணம் பாராளுமன்ற தொகுதி தி.மு.க மற்றும் கூட்டணி கட்சியினர் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். 

முதலமைச்சர் வருவதை ஒட்டி வெடிகுண்டு கண்டறிந்து அகற்றும் குழுவை சேர்ந்த 13 படையினர் பொதுக்கூட்டம் நடக்கும் மைதானத்தை சுற்றி சோதனை மேற்கொண்டு வருகின்றனர். 

வேலூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று ட்ரோன்கள், பலூன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Vellore cm Stalin election campaign


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->