பாஜகவுக்கு பாடம் புகட்டிய கர்நாடக மக்கள் - விசிக தலைவர் திருமாவளவன்.! - Seithipunal
Seithipunal


கர்நாடகா சட்டமன்ற பொது தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.

கர்நாடக மாநிலம் முழுவதும் 36 மையங்களில் வாக்கு எண்ணும் பணி நடைபெறுகிறது. மொத்தம் உள்ள 306 அறைகளில் 4,256 மேஜைகள் அமைக்கப்பட்டு வாக்குகள் என்னும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

கர்நாடக மாநிலத்தில் உள்ள 224 தொகுதிகளில் ஆட்சியமைக்க 113 தொகுதிகள் தேவைப்படும் நிலையில் காங்கிரஸ் 120 தொகுதிகளுக்கு மேல் முன்னிலையில் இருந்து வருகிறது. ஆளுங்கட்சியான பாஜக 82 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது. காங்கிரஸ் அதிக தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளதால் கர்நாடக காங்கிரஸ் கட்சியின் தொண்டர்கள் உற்சாகமடைந்துள்ளனர். 

இந்த நிலையில் கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் பாஜகவுக்கு கர்நாடக மக்கள் சம்மட்டி அடி கொடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர், இந்த தேர்தலில் பாஜகவுக்கு கர்நாடக மக்கள் தகுந்த பாடம் புகட்டியுள்ளனர். தற்போது வரை பாஜக 82 இடங்களில் மட்டுமே முன்னிலையில் உள்ளது. ஆனால் காங்கிரஸ் கட்சி தற்போது தனி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் அளவிற்கு முன்னிலையில் உள்ளது.

ஆனாலும் கூட காங்கிரஸ் அதி பெரும் பெரும்பான்மை இல்லாததால் பாஜகவை நினைத்தால் சற்று கவலையளிக்கிறது. ஏனென்றால் பல மாநிலங்களில் பாஜக இது போன்று எம்எல்ஏக்களை வாங்கி ஆட்சியை கலைத்து வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் கர்நாடகாவில் யார் முதலமைச்சர் பதவி வகிப்பார் என்ற குழப்பமும் நீடித்து வருகிறது. இதனை பாஜக சாதகமாக பயன்படுத்தி ஆட்சியை கலைக்க முற்படும். எனவே தேசிய காங்கிரஸ் இதில் தலையிட்டு நிலையான முடிவை எடுக்க வேண்டும். மேலும் காங்கிரஸ் கட்சியினர் ஒற்றுமையாக இருக்க வேண்டும். இதில் பாஜக பின்னாடி போய் சந்தித்தது சற்று ஆறுதலாக இருக்கிறது என தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

VCK thirumavalavan speech about Karnataka assembly election


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->