வழுக்குப்பாறையில் வழுக்கி விழுந்த திருமாவளவன்! வீடியோ போட்டு கலாய்க்கும் நெட்டிசன்கள்! - Seithipunal
Seithipunal


விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன், இன்று பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் சாமி தரிசனம் செய்தார். 

தொடர்ந்து ஸ்ரீமத் போகர் சமாதியில் சிறப்பு தரிசனம் செய்தார். தொடர்ந்து சிறிது நேரம் தியானமும் செய்தார். பழனி ஆதீனம் சிவானந்த புலிப்பாணி பாத்திர சுவாமிகள் சார்பாக, கோவில் மரியாதை செய்யப்பட்டு, அருட்பிரசாதம் வழங்கப்பட்டது.

இதுகுறித்த புகைப்படங்கள் வெளியான நிலையில், பல வருடங்களுக்கு முன் திருமாவளவன் பேசியதற்கு முரணாக இன்று பழனி முருகன் கோவிலுக்கு சென்று இருப்பதாக நெட்டிசன்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

குறிப்பாக ஒருவர், "பழனி முருகன் என்ற வழுக்கு பாறையில் கால் வைத்து சனாதனம் என்ற அதல பாதாளத்தில் விழுந்த அண்ணன் தொல் திருமாவளவன். ஏன்ணே முருகன் நம்ம கடவுள் என்பதைப் பற்றி கேள்வி எழுப்பும் நீங்கள் புத்தரை மட்டும் கொண்டாடுவது ஏன் புத்தர் மட்டும் நம் கடவுளா? முருகனை முன்னோராக பாருங்க" என்று பதிவிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

VCK Thirumavalavan old video and now he in Murugan Temple visit


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->