முதல்ல ஸ்வீட் எடுமா.! அதிமுக-பாஜக கூட்டணி முறிவு கேள்விக்கு ஜிலேபி கொடுத்த வாய் அடைத்த வானதி! - Seithipunal
Seithipunal


அதிமுக தலைவர்கள் குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தொடர்ந்து விமர்சனம் செய்து வந்த நிலையில் அதிமுக கூட்டணியில் பாஜக இல்லை என செய்தியாளர்கள் சந்திப்பில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அறிவித்தார். இதனால் அதிமுக நிர்வாகிகளுக்கும் பாஜக நிர்வாகிகளுக்கும் இடையே நீண்ட காலமாக இருந்து வந்த பனிப்போர் தற்போது கூட்டணி முடிவின் மூலம் முடிவுக்கு வந்து நேரடி அரசியல் போராக மாறி உள்ளது.

இந்த அறிவிப்பு வெளியானதில் இருந்து அதிமுக நிர்வாகிகளும் பாஜக நிர்வாகிகளும் ஒருவரை ஒருவர் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். ஆனால் டெல்லி பாஜக தலைமையோ அதிமுகவுடனான கூட்டணியை தொடர வேண்டும் என எதிர்பார்ப்பதால் கூட்டணி பேச்சு வார்த்தை மற்றும் தொகுதி பங்கீடு முன்பாக இந்த விவகாரத்தை சமூகமாக பேசி தீர்க்க வேண்டும் என தமிழக பாஜக தலைமைக்கு டெல்லி பாஜக தலைமை உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த நிலையில் பாஜக தேசிய மகளிர் அணி தலைவியும் பாஜக எம்எல்ஏவுமான வானதி சீனிவாசன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அதிமுக-பாஜக கூட்டணி முறிவு குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த அவர் "இன்று நாம் வரலாற்று சிறப்புமிக்க பெண்களுக்கான இட ஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்பட்ட மிக முக்கியமான நாள். அதைப்பற்றி நாம் பேசிக் கொண்டிருக்கிறோம். பாஜக தேசிய தலைமை தான் கூட்டணி குறித்தான முடிவுகளை எடுக்கும் அதிகாரம் உள்ளது.

இந்த விவகாரத்தால் கூட்டணி தொடர்வது, கூட்டணியில் யார் இருப்பது, யார் தலைமை தாங்குவது எல்லாமே கட்சியின் தேசிய தலைமை முடிவெடுத்து அறிவிக்கும். கூட்டணி பொருத்தவரையும் இதுதான் என்னுடைய பதில், இதைத் தவிர என்னிடம் வேறு எந்த பதிலும் கிடையாது. கூட்டணி குறித்து இதற்கு மேல் எந்த ஒரு பதிலும், வார்த்தையும் சொல்ல நான் விரும்பவில்லை" என வானதி சீனிவாசன் பதில் அளித்தார்.

ஆனால் அவரை விடாத பத்திரிகையாளர்கள் பொள்ளாச்சியில் அதிமுக-பாஜக கூட்டணி முறிவை பாஜகவினர் பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாடியுள்ளனர் என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பும் போதே கூட்டணி குறித்து தேசிய தலைமை முடிவு செய்யும் என பதிலளித்து செய்தியாளர்கள் சந்திப்பில் இருந்து வானதி சீனிவாசன் எஸ்கேப் ஆக முயன்றார்.

ஆனால் அவர விடாமல் கேள்வி எழுப்பிய செய்தியாளர்களை நோக்கி இன்று ஒரு நாள் ஆவது பெண்கள் இட ஒதுக்கீடு மசோதா குறித்து செய்தியை போடுங்க என ஆதங்கத்துடன் பேசினார்.

அப்போது ஆளுங்கட்சியாக இருக்கும் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வர கூட்டணி தொடருமா என விடாமல் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு நீங்கள் எப்படி கேட்டாலும் என்னுடைய ஒரே பதில் இதுதான் என சமாளித்தார். 

ஆனால் விடாமல் பத்திரிகையாளர்கள் கூட்டணி குறித்து கேள்வி எழுப்பிக் கொண்டே இருந்தனர். அப்போது பெண் செய்தியாளர் ஒருவர் கேள்வி கேட்க முயன்ற போது அவரை "இங்க வாமா ஸ்வீட் எடுமா முதல்ல.. முதல்ல நீ ஜிலேபி சாப்பிடுமா.." என சமாளித்தவாறு செய்தியாளர்கள் சந்திப்பில் இருந்து வானதி சீனிவாசன் நழுவி சென்றார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Vanathi said that Delhi BJP leaders will decide in alliance issue


கருத்துக் கணிப்பு

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் திமுக வெற்றி நீங்கள் எதிர்பார்த்ததா?Advertisement

கருத்துக் கணிப்பு

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் திமுக வெற்றி நீங்கள் எதிர்பார்த்ததா?
Seithipunal
--> -->