திமுகவில் உழைத்தவர் முதல்வராக முடியுமா.? அருகதையே கிடையாது.!! மு.க ஸ்டாலினை விளாசிய வானதி சீனிவாசன்.!! - Seithipunal
Seithipunal


தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் இன்று சென்னை கும்மிடிப்பூண்டியில் நடைபெற்ற திமுக நிர்வாகி வேணு இல்ல திருமண விழாவில் கலந்து கொண்டார். இந்த விழாவில் பேசிய முதல்வர் மு.க ஸ்டாலின் பாஜகவையும் பிரதமர் நரேந்திர மோடியையும் கடுமையாக விமர்சனம் செய்திருந்தார். 

குறிப்பாக திமுக குடும்ப அரசியல் தான் செய்கிறது. திமுகவினர் அனைவரும் கருணாநிதியின் மகன்கள். பிரதமர் நரேந்திர மோடிக்கு இப்பொழுது அச்சம் ஏற்பட்டுள்ளது. பீகார் மாநிலம் பாட்னாவில் நடைபெற்ற எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் முதற்கட்ட கூட்டத்திற்கு பிறகு ஏற்பட்ட அச்சத்தால் பிரதமர் நரேந்திர மோடி அவர்களே இறங்கி வந்து பேசக்கூடிய சூழ்நிலை உருவாகியுள்ளது என விமர்சனம் செய்திருந்தார்.

இதற்கு பாஜக தேசிய மகளிர் அணி தலைவியும் கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் பதிலடித்துள்ளார். இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் பேசியதாவது "நீண்ட காலம் இணைந்து குடும்ப வாழ்க்கையை நடத்த வேண்டும் என்ற வாழ்த்துக்களை மீறி மிக கடுமையான அரசியல் விமர்சனத்தை திருமண விழாவில் மு.க ஸ்டாலின் வைத்துள்ளார்.

திருமண விழாவிற்கு சென்றால் மணமக்களுக்கும் அவருடைய குடும்பத்தினருக்கும் வாழ்த்து தெரிவிப்பது தான் மரபு. திருமணத்திற்கு வருபவர்களின் மனமும் வாழ்த்துக்களும் நேர்மறையாக அந்த மணமக்களுக்கு சென்று சேர வேண்டும் என்ற எண்ணம் முதலில் இருக்க வேண்டும்.

அந்த திருமண விழாவில் அமர்ந்து கொண்டு எதிர்க்கட்சிகளை வசை பாடுவது எதிர்க்கட்சிகளுக்கு சாபம் கொடுப்பது இது எல்லாம்தான் இவர்கள் நினைக்கக்கூடிய திராவிட மாடல் என்று நாங்கள் யோசிக்கிறோம். நல்ல இடங்களுக்குச் சென்றால் கூட அங்கு அரசியல் பேசுவது அநாகரிகமானதாக நாங்கள் பார்க்கிறோம். பிரதமர் நரேந்திர மோடி போபாலில் பேசியது 100% உண்மை. அவர் பொய் பேசவில்லை.

எந்த மாநிலங்களில் எல்லாம் குடும்ப ஆட்சி நடைபெறுகிறது என்பதை பிரதமர் மோடி பெயருடன் சுட்டி காட்டியுள்ளார். நீங்கள் குடும்ப ஆட்சி நடத்தவில்லை என சொல்லுங்க. எங்களின் குடும்பத்திலிருந்து வாரிசு என்கிற காரணத்திற்காக பதவி கொடுக்கவில்லை அல்லது நான் இப்பொழுது வகிக்கக்கூடிய முதலமைச்சர் பதவி என்பது திமுகவில் யார் உழைத்தாலும் ஒரு நாள் அடைய முடியும் என்று வெளிப்படையாக கூறுங்கள். உங்களால் சொல்ல முடியுமா.?

உங்கள் மகன் என்பதால் அமைச்சரவையில் உதயநிதிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. நீங்கள் வகிக்கக்கூடிய முதல்வர் நாற்காலி என்பது உங்கள் குடும்பத்திற்கு சொந்தமானதாக வைத்துக்கொண்டு பாஜக போன்ற ஒரு முழுமையான ஜனநாயக கட்சியை குறை கூறுவதற்கு உங்களுக்கு எந்த அருகதையும் கிடையாது" என முதல்வர் மு.க ஸ்டாலினுக்கு வானதி சீனிவாசன் பதிலடி கொடுத்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Vanathi response MKStalin comments on bjp and modi


கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...




Seithipunal
--> -->