மு.க ஸ்டாலின் ஆதாரம் இல்லாமல் பேச மாட்டார்! - மதிமுக பொதுச்செயலாளர் வைகோ.!! - Seithipunal
Seithipunal


மதுரை மாவட்டம் வலையங்குளத்தில் அமைந்துள்ள தனியார் கல்லூரி மைதானத்தில் மதிமுக சார்பில் வரும் செப்டம்பர் 15ம் தேதி மாநாடு நடைபெற உள்ளது. இதற்கான பணிகளை மதிமுக நிர்வாகிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

மாநாடு ஏற்பாடுகளை ஆய்வு செய்வதற்காக விமான மூலம் மதுரை வந்த மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் சிஏஜி அறிக்கையை மேற்கோள் காட்டி மத்திய பாஜக அரசு பல கோடி ரூபாய் ஊழல் செய்துள்ளதாக பேசியது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளித்த அவர் "தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலின் ஆதாரம் இல்லாமல் பேசமாட்டார். தகுந்த ஆதாரம் இருப்பதால் தான் மோடி அரசின் மீது ஊழல் குற்றச்சாட்டு குறித்து பேசி இருப்பார்" என பதில் அளித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Vaiko said MKStalin will not speak without evidence


கருத்துக் கணிப்பு

மாணவர்களின் பெற்றோர்கள் ஸ்மார்ட் போன் வைத்திருக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியிருப்பது பற்றிய உங்கள் கருத்து?Advertisement

கருத்துக் கணிப்பு

மாணவர்களின் பெற்றோர்கள் ஸ்மார்ட் போன் வைத்திருக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியிருப்பது பற்றிய உங்கள் கருத்து?
Seithipunal
--> -->