ஆப்கன் மக்களுக்குச் செய்த உதவிகள் என்ன? வைகோ கேள்வி.! மத்திய அமைச்சர் விளக்கம்.!! - Seithipunal
Seithipunal


பாராளுமன்ற கூட்டத்தொடரில் மாநிலங்களவை உறுப்பினர் வைகோ ஆப்கான் மக்களுக்கு செய்த உதவி என்ன என்பது குறித்து கேள்வி கேட்டார். அதற்கு மத்திய அயல் உறவுத் துறை இணை அமைச்சர் விளக்கமளித்தார்.

வைகோ கேள்வி :

1. உள்நாட்டுப் போரில் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள ஆப்கானிஸ்தான் மக்களுக்கு, மனிதாபிமான அடிப்படையில் உதவிகள் செய்வதற்காக, தாலிபான்களுடன் இந்திய அரசு அதிகாரிகள் பேசி வருகின்றார்களா?

2. அவ்வாறு இருப்பின், அதுகுறித்த விவரங்கள்.

3. கோதுமை உள்ளிட்ட உணவுப் பொருட்கள் வழங்குவதற்கான திட்டம் ஏதும் உள்ளதா?

4. ஆப்கானிஸ்தான் நாட்டுடன் தூதரக உறவுகளை மேம்படுத்துவதற்கும், வணிகம் குறித்தும் ஏதேனும் திட்டங்கள் உள்ளதா?

5. அவ்வாறு இருப்பின், அதுகுறித்த விவரங்கள் தருக.

அயல்உறவுத் துறை இணை அமைச்சர் வி. முரளிதரன் அளித்த விளக்கம் :

1 முதல் 5 வரையிலான கேள்விகளுக்கு விளக்கம். இந்தியாவின் நீண்டகால நண்பன் என்ற முறையில், ஆப்கானிஸ்தான் நாட்டில் சீர்குலைவுகள் குறித்து, மனிதாபிமான அடிப்படையில் இந்தியா கவலை கொண்டுள்ளது.

ஆப்கன் மக்களுடன் கொண்டுள்ள உறவுகள் மற்றும் ஐ.நா. மன்றத்தின் பாதுகாப்பு சபை தீர்மானம் 2593 ஆகியவை, அந்த நாட்டுடன், இந்தியா மேற்கொள்ள வேண்டிய அணுகுமுறைக்கு வழிகாட்டும். அதன்படி, 50000 மெட்ரிக் டன் கோதுமை, உயிர்காக்கும் மருந்துகள் மற்றும் கொவிட் தடுப்பு மருந்துகளை, மனிதாபிமான அடிப்படையில், ஐ.நா. மன்றத்தின் சார்பு நிறுவனங்களுடன் இணைந்து, ஆப்கன் மக்களுக்கு வழங்குவதற்கு இந்தியா உறுதி அளித்து இருக்கின்றது என தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

vaiko question for parliament


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?




Seithipunal
--> -->