வைகோவை கண்கலங்க வைத்த தலைவர்..! மேடையில் அரங்கேறிய சம்பவம்.! - Seithipunal
Seithipunal


உடல் நலத்தை கவனிக்குமாறு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறிய அறிவுரையால், மதிமுக மாநாட்டின் போது, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ நெகிழ்ந்து கண்கலங்கியிருக்கிறார்.

பேரறிஞர் அண்ணாவின் 111ஆவது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு சென்னை நந்தனத்தில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் மதிமுக சார்பில் மாநாடு நடைபெற்று வருகிறது. இதில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். அவருக்கு மாலை அணிவித்து, நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.

இதை தொடர்ந்து உரை நிகழ்த்திய மு.க.ஸ்டாலின், மத்திய பாஜக ஆட்சியில் திட்டமிட்டு தமிழகம் புறக்கணிக்கப்படுவதாக குற்றம்சாட்டினார். ரயில்வே, அஞ்சல் துறைகளில் தமிழ் புறக்கணிக்கப்படுவதாகக் கூறிய அவர், லேசாக கண் அயர்ந்தால் கூட இந்தியை திணித்து விடுவார்கள் என்று தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து பேசிக் கொண்டிருந்த ஸ்டாலின், வைகோவை பார்த்து உடல் நலனைப் பேணி பாதுகாக்குமாறு அறிவுரை கூறினார். ஒரு சகோதரன் என்கிற முறையில் கண்டித்துக் கூறுவதாகவும் ஸ்டாலின் தெரிவித்தார். வைகோ ஆரோக்கியமாக இருந்தால் தான் தமிழகம் ஆரோக்கியமாக இருக்கும் என்றும் ஸ்டாலின் குறிப்பிட்டார். ஸ்டாலினின் வார்த்தைகளால் நெகிழ்ந்த வைகோ கண்கலங்கினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

vaiko cry on stage


கருத்துக் கணிப்பு

முதல்வர் பதவி ஏற்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாக பாடப்பட்டது..



Advertisement

கருத்துக் கணிப்பு

முதல்வர் பதவி ஏற்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாக பாடப்பட்டது..


செய்திகள்



Seithipunal
--> -->