மதுரை: தப்பி ஓடிய திமுக அமைச்சர்கள்.! வசமாக சிக்கிய ஆட்சியர்.! 7 பேர் மருத்துவமனையில் அனுமதி.!  - Seithipunal
Seithipunal


வைகை அணையில் தண்ணீர் திறப்பின் போது, தேன்கூடு களைந்து தேனீக்கள் தாக்க முற்பட்டதால், அமைச்சர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் அந்த இடத்தில் இருந்து தப்பி ஓடி தப்பினர். இருப்பினும் இதில் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட ஏழு பேருக்கு தேனீக்கள் தாக்கியதில், தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி 71அடி உயரம் உள்ள வைகை அணையில் இருந்து மதுரை, திண்டுக்கல், சிவகங்கை மாவட்டங்களுக்கு ஒரு போக நெல் சாகுபடிக்காக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதனை கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ பெரியசாமி, ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் பெரியகருப்பன், வணிகத் துறை மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி உள்ளிட்டோர் தண்ணீரை திறந்து வைத்தனர்.

இந்த நிகழ்ச்சியில் தேனி மாவட்டம், திண்டுக்கல் மாவட்டம், மதுரை மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் பொதுப்பணித்துறை பொறியாளர்கள் கலந்து கொண்டனர்.

இந்நிலையில், அணையின் முதலாவது மடையில் இருந்து தண்ணீர் திறக்கும் போது, அந்த மதகுகளின் இடுக்கில் இருந்த தேன்கூடுகள் கலைந்து, தேனீக்கள் வெளியேறியது. இதனை சற்றும் எதிர்பார்க்காத அமைச்சர்கள், மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் அதிகாரிகள் செய்வதறியாது திகைத்து நின்றனர்.

தேனீக்களின் தாக்குதலில் இருந்து தப்பிப்பதற்காக பலரும் அந்த இடத்திலிருந்து விரைவாக ஓடிச் சென்றனர். இருப்பினும் தேனீக்கள் தாக்கியதில் பொதுப்பணித்துறை பொறியாளர்கள், ஊழியர்கள் உள்ளிட்ட 7 பேர் தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், லேசான காயமடைந்த தேனி மாவட்ட ஆட்சியருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு உள்ளது. தற்போது தேனி கூடு கலைந்ததன் காரணமாக இரண்டு மதகுகளில் மட்டுமே தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

vaikai dam open honey bee attack


கருத்துக் கணிப்பு

தமிழக அரசால் நீட் தேர்வை ரத்து செய்ய.,Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழக அரசால் நீட் தேர்வை ரத்து செய்ய.,
Seithipunal