உ.பியில் பாஜக ஆட்சியைப் பிடித்தாலும்.. மிகுந்த வருத்தத்தில் யோகி ஆதித்யநாத்.! - Seithipunal
Seithipunal


உத்திரபிரதேச சட்டப்பேரவை தேர்தலில் பதவியில் இருந்த 10 அமைச்சர்கள் தேர்தலில் தோல்வி அடைந்துள்ளது பாஜக மேலிடத்திற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

5 மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் நேற்று அறிவிக்கப்பட்டன. இதில் பஞ்சாபை தவிர்த்து உத்திரப் பிரதேசம் உத்தரகாண்ட் கோவா மணிப்பூர் ஆகிய 4 மாநிலங்களில் பாஜக ஆட்சி அமைக்கிறது. குறிப்பாக உத்தரப்பிரதேச மாநிலத்தில் பாஜகவின் வெற்றி நாடுமுழுவதும் உள்ள கட்சித் தொண்டர்களுக்கு மிகுந்த உற்சாகத்தை அளித்துள்ளது.

உத்தரபிரதேச மாநிலத்தில் யோகி ஆதித்யநாத் மீண்டும் முதலமைச்சராக பொறுப்பேற்க உள்ளார். இதனிடையே உத்தரப் பிரதேசத்தில் பாஜக வெற்றி பெற்றாலும் ஒரு அடியும் கிடைத்துள்ளது. அதாவது உத்தர பிரதேச தேர்தலில் பதவியில் இருந்த 10 அமைச்சர்கள் இந்த தேர்தலில் தோல்வி அடைந்துள்ளனர்.

உத்திரபிரதேச துணை முதல்வரும் பொதுப்பணி, உணவு பதப்படுத்தல் உட்பட பல்வேறு துறைகளின் அமைச்சருமான கேசவ பிரசாத் மவுரியா, கரும்பு துறை அமைச்சர் சுரேஷ் ராணா, வருவாய் துறை சத்தியபால் சிங் கங்வார், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ராஜேந்திர பிரதாப் சிங், பொதுப்பணித் துறை இணையமைச்சர் சந்திரிகா பிரசாத் உபாத்யாய, ஊரக வளர்ச்சித் துறை இணை அமைச்சர் ஆனந்த் ஸ்வரூப் சுக்லா, விளையாட்டுத் துறை இணை அமைச்சர் உபேந்திர திவாரி, ஆரம்ப கல்வித் துறை இணை அமைச்சர் சதீஷ் சந்திர திவேதி, லகான் சிங் ஆகியோர் தோல்வி அடைந்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Uttar Pradesh 10 ministers defeat in assembly election


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->