நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்.. தமிழகம் முழுவதும் 57,778 வேட்பாளர்கள் போட்டி.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள் 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள ஆயிரத்து 374 மாநகராட்சி உறுப்பினர்கள், 3 ஆயிரத்து 843 நகராட்சி உறுப்பினர்கள், 7 ஆயிரத்து 609 பேரூராட்சி உறுப்பினர்கள் என மொத்தம் 12 ஆயிரத்து 826 பதவிகளுக்கு வருகின்ற 19ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது.

இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 28ஆம் தேதி தொடங்கி 4 ஆம் தேதி வரை நடைபெற்றது. கடந்த 5ஆம் தேதி வேட்புமனு பரிசீலனை நடைபெற்றது. நேற்று வேட்பு மனுவை வாபஸ் பெற நேற்று கடைசி நாள். அதையடுத்து, நேற்று மாலை 5 மணிக்கு இறுதி வேட்பாளர் பட்டியலை மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டது.

இந்நிலையில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 12,607 பதவியிடங்களுக்கு 57,778 வேட்பாளர்கள் போட்டியிடுவதாக மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளார். மாநகராட்சி - 11196, நகராட்சி - 17922, பேரூராட்சி - 28660 பேர் போட்டியிடுகின்றனர். தற்போது களத்தில்-57,778 வேட்பாளர்கள் உள்ளனர். இதில், 218 பேர் போட்டியின்றி தேர்வாகியுள்ளார்.

14,324 வேட்பு மனுக்கள் வாபஸ் பெறப்பட்டுள்ளது. மேலும், 2,062 பேரின் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது. ஓரிடத்தில் வேட்புமனு எதுவும் தாக்கலாகவில்லை என மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

urban local body election 57778 candidate


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->