த.வெ.க. தலைவர் விஜய் பிரசாரத்தில் எதிர்பாராத சிக்கல்!! - கூட்ட நெரிசலால் தாமதம்...! உரை தொடங்குமா...?
Unexpected problem TVk leader Vijays campaign Delay due crowd speech start
2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் மாதங்கள் இருக்கும் நிலையிலும், தமிழக அரசியல் மேடை ஏற்கனவே சூடுபிடித்துள்ளது. இதில் வாக்காளர்களை கவர அரசியல் கட்சிகள் பல்வேறு யுக்திகளை வகுத்துக் கொண்டிருக்கும் வேளையில், நடிகர் விஜயின் அரசியல் வருகை அதிரடி அலைபோல் எழுந்து, மக்கள் மத்தியில் தேர்தல் மீதான எதிர்பார்ப்பை வெகுவாக உயர்த்தியுள்ளது.

தனது கொள்கைகளையும், அரசியல் நிலைப்பாட்டையும் மக்களிடம் பரப்பி வந்த விஜய், இப்போது அடுத்த கட்டமாக தேர்தல் பிரசார சுற்றுப்பயணத்தைத் தொடங்கியுள்ளார். அவ்வகையில், த.வெ.க. தலைவர் விஜய் இன்று திருச்சியில் இருந்து மக்கள் சந்திப்பு பிரசாரத்தை தொடங்கி வைத்தார்.
வருகிற டிசம்பர் மாதம் வரை ஒவ்வொரு சனி, ஞாயிற்றுக்கிழமைகளிலும் அவர் பிரசாரக் கூட்டங்களை நடத்த திட்டமிட்டுள்ளார்.இதற்காக இன்று காலை சென்னை விமான நிலையத்திலிருந்து தனியார் விமானத்தில் புறப்பட்ட விஜய்க்கு, திருச்சியில் தொண்டர்கள் ஆர்ப்பரிப்புடன் வரவேற்பு அளித்தனர்.
மேலும் காந்தி மார்க்கெட் காவல் சரகத்தின் மரக்கடை எம்.ஜி.ஆர். சிலை அருகே அவரது மக்கள் சந்திப்பு கூட்டம் நடைபெற்று வருகிறது.ஆனால், விஜய் வரும் வழியெங்கும் திரண்டிருந்த தொண்டர்களும், பொதுமக்களும் பெரும் கூட்ட நெரிசலை உருவாக்கியதால், பிரசார வாகனம் செல்ல முடியாமல் காவலர்களுக்கு பெரும் சவாலாக மாறியது.
மேலும், அனுமதிக்கப்பட்ட 10.30 மணி முதல் 11 மணி நேரத்தில் விஜய் பேச வேண்டும் என இருந்த நிலையில், கூட்ட நெரிசல் காரணமாக அவரது உரையில் தாமதம் ஏற்பட்டது.இருப்பினும், வழியெங்கும் கைகூப்பியும், கையசைத்தும் மக்களை வரவேற்ற விஜய், தனது அரசியல் பயணத்தின் தொடக்கமே மக்கள் அலைபோல் உருவாகியிருப்பதை உறுதிப்படுத்தியுள்ளார்.
English Summary
Unexpected problem TVk leader Vijays campaign Delay due crowd speech start