கர்நாடகத்தில் புதிதாக 24 அமைச்சர் பதவியேற்பு.!! - Seithipunal
Seithipunal


கர்நாடகத்தில் புதிதாக 24 அமைச்சர் பதவியேற்பு.!!

கர்நாடக மாநிலத்தில் கடந்த பத்தாம் தேதி நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் அமோக வெற்றிபெற்று ஆட்சியை கைப்பற்றியது. இருப்பினும் பல போராட்டங்களுக்குப் பிறகு கர்நாடக முதலமைச்சராக சித்தராமையாவும், துணை முதலமைச்சராக டிகே சிவக்குமாரும் கடந்த 20ம் தேதி பதவியேற்றுக் கொண்டனர். 

அப்போது, எட்டு பேர் அமைச்சர்களாக பொறுப்பேற்றுக்கொண்டனர். இதையடுத்து அமைச்சரவை விரிவாக்கம் குறித்து காங்கிரஸ் கட்சி ஆலோசனை நடத்தி வந்த நிலையில், இன்று புதிதாக 24 பேர் அமைச்சர்களாக பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அதன் படி தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் உள்ளிட்ட  இருபத்திநான்கு பேர் அமைச்சர்களாக பதவியேற்கின்றனர். மேலும், மகாதேவப்பா, எச்.கே.பாட்டீல், மது பங்காரப்பா, உள்ளிட்டோரும் அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளனர்.

அதன் படி இந்த இருபத்து நான்கு பேரும் இன்று காலை 11.45 மணியளவில் கர்நாடக கவர்னர் மாளிகையில் அமைச்சர்களாக பதவியேற்கின்றனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

twenty four ministers sworn today in karnataga


கருத்துக் கணிப்பு

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் திமுக வெற்றி நீங்கள் எதிர்பார்த்ததா?Advertisement

கருத்துக் கணிப்பு

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் திமுக வெற்றி நீங்கள் எதிர்பார்த்ததா?
Seithipunal
--> -->