2026-ல் மக்கள் சக்தியால் ஆட்சி பீடத்தில் அமர்வார் விஜய் - செங்கோட்டையன் பேட்டி!
TVK Vijay Sengottaiyan 2026 election
தமிழக வெற்றிக் கழகத்தின் (த.வெ.க.) நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளராகப் பொறுப்பேற்றுள்ள முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், இன்று ஆழ்வார்பேட்டையில் உள்ள தனது இல்லத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், அ.தி.மு.க.வில் இருந்து த.வெ.க.வில் இணையவிருக்கும் மற்றவர்கள் குறித்து இப்போது தகவல் வெளியிட முடியாது என்று தெரிவித்தார்.
செங்கோட்டையன் அளித்த பேட்டியின் முக்கிய அம்சங்கள்:
"நேற்றுதான் கட்சியில் இணைந்துள்ளேன். இன்று சொந்த நிகழ்வுக்காகக் கோவை செல்கிறேன். அங்குச் சென்று வந்தபின், விஜய்யுடன் கலந்து பேசி அடுத்தக்கட்ட முடிவுகளை அறிவிப்பேன்."
"நான் எப்படிச் செயல்படுவேன் என்பது உங்களுக்குத் தெரியும். அந்த வகையில், ஆட்சி மாற்றத்தை உருவாக்கி, விஜய் தலைமையில் தமிழகத்தில் வெற்றி நடைபோடுவதற்கு அயராது உழைப்பேன்."
பிரசாரத் திட்டம்: விஜய்யுடன் இணைந்து தனது சொந்தத் தொகுதியான கோபிசெட்டிபாளையத்தில் சுற்றுப்பயணம் செய்து பிரசாரம் மேற்கொள்வது குறித்து விரைவில் முடிவு செய்வேன்.
மக்களின் மனநிலையில், அவர்களுக்கு ஒரு புதிய இயக்கம் தமிழகத்தை ஆள வேண்டும் என்ற நோக்கம் இருக்கிறது. மக்களால் நேசிக்கப்படுகிற த.வெ.க. தலைவர் விஜய், 2026-ஆம் ஆண்டு மக்கள் சக்தியால் ஆட்சி பீடத்தில் அமருகிற காலம் உருவாகும்."
த.வெ.க. கொடி
இன்று வீட்டை விட்டு வெளியே கிளம்பும்போது செங்கோட்டையன் தனது வாகனத்தில் த.வெ.க. கட்சிக் கொடியைக் கட்டி இருந்தது, அவர் முழுமையாகப் புதிய கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டுவிட்டதைக் காட்டுவதாக அமைந்தது.
English Summary
TVK Vijay Sengottaiyan 2026 election