"மூன்றாம் இடத்துக்கு தள்ளப்பட்ட திமுக... தொடரும் தவெகவின் ஆதிக்கம்!" மதுராந்தகம், தாராபுரத்தில் தொடர்ந்து தவெக முன்னிலை!
TVK Maintains Lead in Round 2 of Madhuranthakam and Dharapuram By-Elections; Fierce Fight Between DMK AIADMK for Second Place
தமிழ்நாட்டில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கையில், 2-ஆம் சுற்று முடிவிலும் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தொடர்ந்து முன்னணி வகித்து வருகிறது.
மதுராந்தகம் தொகுதி நிலவரம் (2-ஆம் சுற்று): தவெக வேட்பாளர் 5,061 வாக்குகள் பெற்றுத் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார். திமுக 3,710 வாக்குகளுடன் இரண்டாம் இடத்திலும், அதிமுக 2,903 வாக்குகளுடன் மூன்றாம் இடத்திலும் உள்ளன. நாம் தமிழர் கட்சி 39 வாக்குகளையும், சிபிஎம் 19 வாக்குகளையும் பெற்றுள்ளன.
தாராபுரம் தொகுதி நிலவரம் (2-ஆம் சுற்று): தவெக வேட்பாளர் 6,189 வாக்குகள் பெற்று வலுவான முன்னிலையில் தொடர்கிறார். அதிமுக 4,053 வாக்குகளுடன் இரண்டாம் இடத்திலும், திமுக 3,078 வாக்குகளுடன் மூன்றாம் இடத்திலும் உள்ளன. நாம் தமிழர் கட்சி 64 வாக்குகளையும், சிபிஎம் 23 வாக்குகளையும் பெற்றுள்ளன.
இரண்டாம் இடத்திற்கான கடும் போட்டி: இரு தொகுதிகளிலுமே தவெக தனது முன்னிலையைத் தொடர்ந்து தக்கவைத்து வரும் நிலையில், இரண்டாம் இடத்தைப் பிடிப்பதில் திமுக மற்றும் அதிமுக இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.
English Summary
TVK Maintains Lead in Round 2 of Madhuranthakam and Dharapuram By-Elections; Fierce Fight Between DMK AIADMK for Second Place