திமுக கூட்டணிக்கும், தவெக தலைமையில் அமையும் கூட்டணிக்கும் இடையேதான் போட்டி: டிடிவி தினகரன் ஆருடம்..!
TTV Dhinakaran says the competition is between the DMK alliance and the alliance led by the TVK
புதுக்கோட்டையில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்கள் சந்திப்பில், தவெகவினர் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சராக ஏற்க மாட்டார்கள் என்று தெரிவித்துள்ளார். அத்துடன், எடப்பாடி பழனிசாமி துரோகம் செய்வார் என்பது விஜய்க்கு தெரியாதா? அதனால் பழனிசாமி தலைமையிலான கூட்டணிக்கு விஜய் செல்ல மாட்டார் என்று குறிப்பிட்டுள்ளார்.
அதிமுக கூட்டணிக்கு விஜய்யை இழுக்க வேண்டும் என்பதற்காக எடப்பாடி பழனிசாமி சிறுபிள்ளைத்தனமாக செயல்பட்டு வருகிறார் என்றும் , வரும் தேர்தலில் விஜய் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவார் என்றும் தினகரன் தெரிவித்துள்ளார்.
மேலும், தேர்தலில் விஜய் 02-வது இடத்திற்கு வரும் வாய்ப்பும் இருக்கிறது என்றும், நீங்கள் கணிக்க முடியாத அளவுக்கு தேர்தலில் புதிய கூட்டணிகள் உருவாகும் என்றும் கூறியுள்ளார். அத்துடன், தனக்கு தெரிந்தவரை திமுக கூட்டணிக்கும், தவெக தலைமையில் அமையும் கூட்டணிக்கும் இடையேதான் போட்டி இருக்கும் என்பது அவருடைய கணிப்பு என்றும் செய்தியாளர்களிடம் டிடிவி தினகரன் குறிப்பிட்டுள்ளார்.
English Summary
TTV Dhinakaran says the competition is between the DMK alliance and the alliance led by the TVK