அதிமுகவுடன் கூட்டணி.. இது தவறான முடிவல்ல.. பரபரப்பு கிளப்பிய டிடிவி.!! - Seithipunal
Seithipunal


பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் தேனிமா நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் டி டி வி தினகரன் தனியார் செய்தி ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் அதிமுகவுடன் கூட்டணி வைப்பேனு தெரிவித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

இது குறித்து அவர் அளித்த பேட்டியில் "பாஜகவுடன் கூட்டணி வைத்து தாமரை சின்னத்தில் போட்டியிட என்னை யாரும் நிர்பந்திக்கவில்லை. முதலமைச்சராக எடப்பாடி பழனிச்சாமியை தேர்ந்தெடுத்தது தவறான முடிவு அல்ல அன்றைய சூழலில் அது சரியான முடிவு. 

திராவிட கட்சிகளுக்கு இணையாக பாஜகவின் கட்டமைப்பு தமிழ்நாட்டில் வளர்ந்துள்ளது. கிராமப்புறங்களில் பூத் கமிட்டி வைக்கும் அளவிற்கு பாஜக நிறைய இடங்களில் வளர்ந்துள்ளது. துணிச்சல் இல்லாததால் அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள் தேர்தலில் போட்டியிடவில்லை.

முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் சுயேட்சையாக தேர்தலில் போட்டியிடுகிறார். இபிஎஸ் எஸ் பி வேலுமணி சி.வி சண்முகம் ஜெயக்குமார் உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள் ஏன் போட்டியிடவில்லை? அதிமுகவை உண்மையான தொண்டர்கள் வழி நடத்தினால் அவர்களோடு கூட்டணி வைப்பேன்" என கூறியுள்ளார் டிடிவி தினகரன்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TTV dhinakaran Said I will Alliance with AIADMK


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->