செந்தில்பாலாஜி திமுகவிலும் தங்கமாட்டார்.! அடித்து சொல்லும் டிடிவி தினகரன்..!! - Seithipunal
Seithipunal


சென்னை ராயப்பேட்டையில் உள்ள அமமுக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் செயற்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் பல முக்கியத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு நிர்வாகிகளுக்கு உற்சாகம் அளிக்கும் வகையில் தினகரன் பேசினார். அப்போது பேசிய அவர் "திமுக அமைச்சரவை பட்டியல் வெளியான போது நம்ம கட்சியை சேர்ந்த முக்கிய நிர்வாகி ஒருவர் "என்னண்ணே செந்தில்பாலாஜி அமைச்சராகிவிட்டார்" என கேட்டார்.

அதற்கு நான் போன வேலையை முடித்துக்கொண்டு திமுகவில் இருந்து வெளியேறிவிடுவார் எனக் கூறினேன். செந்தில்பாலாஜி எப்போதும் துருதுருவென இருப்பார். அதனால் அவர் திமுகவில் தங்கமாட்டார் என அப்போதே கணித்துக் கூறிவிட்டேன். அது தான் நடக்கப் போகிறது. எதை வைத்து வேண்டுமானாலும் அரசியல் செய்தால் இது தான் நிலைமை.

அதிபுத்திசாலித்தனம் என்றைக்குமே ஆபத்து. செந்தில்பாலாஜி திமுகவில் தங்கமாட்டார். செந்தில்பாலாஜியை பற்றி எனக்கு முழுமையாக தெரியும் என்பதால் இதை கூறுகிறேன். அவர் 24 மணி நேரமும் அரசியல் செய்ய வேண்டும் என நினைப்பவர்" என சென்னையில் நடைபெற்ற அமமுக செயற்குழுவில் டிடிவி தினகரன் பேசியுள்ளார். கடந்த 2006ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலின் போது செந்தில்பாலாஜிக்கு கரூர் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கொடுக்கலாம் என ஜெயலலிதாவிடம் சிபாரிசு செய்ததே டிடிவி தினகரன் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TTV Dhinakaran predicts that Senthil Balaji will not stay in DMK


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->