திருச்சியில் அதிர்ச்சி: த.வெ.க. அலுவலகத்திற்குத் தீவைப்பு - தேர்தல் முடிவுகள் நெருங்கும் வேளையில் பதற்றம்! - Seithipunal
Seithipunal


திருச்சி-கரூர் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள காமநாயக்கன்பாளையம் கிராமத்தில், தமிழக வெற்றிக் கழகத்தின் (த.வெ.க) விவசாய அணி அலுவலகம் மர்ம நபர்களால் தீயிட்டு எரிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஸ்ரீரங்கம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட இந்தப் பகுதியில் இயங்கி வந்த இந்த அலுவலகம், நடந்து முடிந்த தேர்தலில் அக்கட்சியின் முக்கியப் பிரசார மையமாக விளங்கியது.

நள்ளிரவில் அரங்கேறிய கொடூரம்
நேற்று நள்ளிரவில் அங்கு வந்த அடையாளம் தெரியாத நபர்கள், அலுவலகத்தின் முன்பிருந்த பிளக்ஸ் பேனர்களைக் கத்தியால் கிழித்து எறிந்துள்ளனர். அதன் தொடர்ச்சியாக, 20-க்கு 20 அடி பரப்பளவு கொண்ட கீற்றுக் கொட்டகையிலான அலுவலகத்திற்குத் தீ வைத்துள்ளனர். இதில் கட்சி கொடிகள், பேனர்கள் மற்றும் சுமார் 50 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் முழுமையாக எரிந்து சாம்பலாகின. கும்பலாக வந்து இந்த வன்முறைச் செயலில் அவர்கள் ஈடுபட்டிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

களத்தில் தொண்டர்கள் மற்றும் போலீஸ் நடவடிக்கை
இன்று காலை தீக்கிரையான அலுவலகத்தைப் பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சியடைந்து கட்சி நிர்வாகிகளுக்குத் தகவல் தெரிவித்தனர். அடுத்த சில நிமிடங்களிலேயே ஏராளமான த.வெ.க. நிர்வாகிகளும் தொண்டர்களும் அந்தப் பகுதியில் திரண்டதால் ஒருவிதப் பதற்றமான சூழல் நிலவியது. இது குறித்து திருச்சி மாநகர மாவட்ட விவசாய அணி செயலாளர் வீரசிவா, பெட்டவாய்த்தலை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Trichy TVK Office Vandalized and Torched High Tension Prevails Near Pettavaithalai


கருத்துக் கணிப்பு

இவர்களில் யார் உங்கள் முதல்வர் வேட்பாளர்..?



Advertisement

கருத்துக் கணிப்பு

இவர்களில் யார் உங்கள் முதல்வர் வேட்பாளர்..?




Seithipunal
--> -->