இன்று கூடும் பாராளுமன்ற கூட்டத்தொடர்.. ரத்தாகும் முக்கிய மசோதா.!! - Seithipunal
Seithipunal


பாராளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் இன்று தொடங்குகிறது. டிசம்பர் 23-ஆம் தேதி வரை இந்த கூட்டத்தொடர் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மக்களவை, மாநிலங்களவை என இரு அவைகளும் ஒரே நேரத்தில் நடைபெறுகிறது. கொரோனா கட்டுப்பாடுகளை பின்பற்றி கூட்டத்தொடர் நடைபெற உள்ளது. 

இந்த கூட்டத்தொடரின் முதல் நாளிலேயே 3 வேளாண் சட்டங்கள் ரத்து மசோதா தாக்கல் செய்யப்படும் என மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் ஏற்கனவே அறிவித்துள்ளார். மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் நடத்திய ஒரு வருட போராட்டத்திற்கு பிறகு பிரதமர் நரேந்திர மோடி, 3 வேளாண் சட்டங்கள் ரத்து செய்யப்படும் என சமீபத்தில் அறிவித்திருந்தார். அதன்படி இன்று மக்களவையில் வேளாண் சட்டங்கள் ரத்து மசோதா தாக்கல் செய்யப்படும். 

அனைத்துக் கட்சிகளும் இம்மசோதாவை ஆதரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பாஜக, காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளும் தங்கள் எம்பிகள் தவறாமல் மழைக்காலக் கூட்டத் தொடருக்கு வர வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளது. மசோதாவை ஆதரித்தாலும், விளைபொருட்களின் குறைந்தபட்ச ஆதரவு விலை சட்டபூர்வ அந்தஸ்து வேண்டுமென விவசாயிகள் இந்த கோரிக்கைகளை எதிர்க்கட்சிகள் எழுப்பும் என தெரிகிறது. இதனால், சபையில் சலசலப்பு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதைத்தவிர 25 மசோதாக்கள் இந்த கூட்டத்தொடரில் அறிமுகப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

today parliamentary winter session begins


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->