அதிமுக பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிராக ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கு - இன்று விசாரணை.! - Seithipunal
Seithipunal


கடந்த 2022-ம் ஆண்டு ஜூலை மாதம் 11-ந் தேதி சென்னை வானகரத்தில் நடைபெற்ற அ.தி.மு.க. பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட நிர்வாகிகள் நீக்கம், பொதுச்செயலாளர் தேர்தல் தொடர்பான தீர்மானங்களுக்கு தடை விதிக்க கோரி ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 25-ந் தேதி தீர்ப்பு அளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். 

இந்த மனுவை நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா, எஸ்.வி.என்.பாட்டி உள்ளிட்டோர் அடங்கிய அமர்வு கடந்த டிசம்பர் மாதம் 8-ந் தேதி விசாரணை செய்தது. பின்னர் இந்த வழக்கு விசாரணை தள்ளி வைக்கப்பட்டது.

இந்த நிலையில், இந்த வழக்கு இன்று நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா, தீபாங்கர் தத்தா உள்ளிட்டோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வருகிறது. இன்று வழங்கப்படும் தீர்ப்பில் ஏதேனும் மாற்றங்கள் நிகழுமா என்று ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் எதிர்பார்க்கின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

today hearing of admk general assembly resolution case


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->