அதிமுகவின் புதிய அவைத்தலைவர்.? வெளியாகப்போகும் முக்கிய அறிவிப்பு.!!
today admk meeting in chennai
தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. இதையடுத்து, 9 மாவட்டங்களில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்றது.
இந்நிலையில். தமிழ்நாடு முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. மாநகராட், நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் இந்த தேர்தல் நடப்பதால், வெற்றியை கோட்டை விட்டு விடக்கூடாது என அதிமுக நினைக்கிறது. வெற்றிக்கான வியூகம் வகுப்பதற்காக அதிமுக மாவட்ட செயலாளர்கள், தலைமை கழக நிர்வாகிகளுடன் சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.

இந்த கூட்டத்தில் 73 மாவட்ட செயலாளர்கள் கலந்து கொள்ள உள்ளனர். இதில் பெரும்பாலானோர் எம்எல்ஏக்களாகவும் இருப்பதால், 65 எம்எல்ஏக்கள் கலந்துகொள்ளவுள்ளனர். இந்த கூட்டம் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமையில் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் அவைத்தலைவர் தேர்வு செய்வது குறித்து ஆலோசிக்கப்படும்.
மேலும், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் கட்சியின் வேட்பாளர்களை எவ்வாறு தேர்வு செய்வது, ஒரே இடத்தில் பலர் போட்டியிட விருப்பம் தெரிவித்தால் அதை எந்த முறையில் அணுகுவது என்பது குறித்து ஆலோசனை நடத்த உள்ளனர்.
English Summary
today admk meeting in chennai