பொதுச் சேவை உரிமைச் பெறும் சட்டத்தை தமிழக அரசு உடனே நிறைவேற்றவேண்டும் - காந்தியக் கூட்டியக்கம் தீர்மானம்.! - Seithipunal
Seithipunal


தமிழக அரசு பொதுச் சேவை உரிமைச் பெறும் சட்டத்தை விரைவில் நிறைவேற்ற வேண்டும் என்று, காந்தியக் கூட்டியக்கத்தின் சார்பில் நடைபெற்ற கவன ஈர்ப்புக்கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

கடந்த 6.2.2022 அன்று காந்தியக் கூட்டியக்கத்தின் சார்பில் கவன ஈர்ப்புக்கூட்டம் நடைபெற்றது. இதில், சிவகங்கை நல்லோர் வட்டப் பொறுப்பாளர் அனந்த ராமன் அவர்கள் தமிழ் தாய் வாழ்த்து படி கூட்டத்தை தொடங்கிவைத்தார்.  

அகில இந்திய காந்திய இயக்கத் தலைவர் வி. விவேகானந்தன் தலைமை உரை ஆற்ற, துரோணா அகாடமி நிறுவனர் திரு . எம் சிவராஜ் நிகழ்ச்சியை நெறிப்படுத்த, தமிழ்நாடு அன்பு வழி அறப்பணி மன்ற சிறப்பு ஆலோசகர் புது விடியல் குகன் வரவேற்புரை நல்கினார்.

அதனை தொடர்ந்து இந்த கூட்டத்தில், 2010 ஆம் ஆண்டு  'பொதுச்சேவை பெறும் உரிமைச் சட்டம்' எனும் சட்டத்தை மத்திய அரசு கொண்டுவந்தது. இந்த சட்டம் 2010, 2011 ஆம் ஆண்டு காதில் நாட்டில் உள்ள 13 மாநிலங்களில் நிறைவேற்றப்பட்டது.

ஆனால், இந்த சட்டம் இதுநாள் வரை தமிழகத்தில் நிறைவேற்றப்படவில்லை. தற்போது ஆளும் கட்சியாக உள்ள திமுக தனது தேர்தல் அறிக்கையில் இச் சட்டத்தை கொண்டுவருவதாக உறுதி கூறி உள்ளது.

இந்த சட்டம் நடைமுறைக்கு வந்தால் அரசு அலுவலர்கள் கையூட்டை எதிர்பார்த்து சேவைகளை மறுப்பதும், கால தாமதப்படுத்துவதும் களையப்பட்டு, பொதுமக்கள் பொதுச் சேவைகளை உரிய காலத்திற்குள் பெறக்கூடிய வாய்ப்பு ஏற்படும்.

எனவே, இந்த பொதுச்சேவை பெறும் உரிமைச் சட்டத்தை தமிழக அரசு விரைவில் நிறைவேற்ற வேண்டும்" என்று, இந்த கூட்டத்தில் பங்கேற்ற நவ கிராம சிற்பி, குத்தம்பாக்கம் ஸி. இளங்கோ, உள்ளாட்சி அறிஞர். க. பழனி துரை, மூத்த பத்திரிக்கையாளர் கே என் வடிவேல், தஞ்சை காந்தி இயக்க அறக்கட்டளை மேலாண்மை இயக்குனர் வழக்கறிஞர் மோகன், சிதம்பரம் காந்தி மன்றத் தலைவர் ஞானம், காந்திய மக்கள் இயக்க மாநில பொதுச் செயலாளர் குமரய்யா, மகாத்மா காந்தி நற்பணி மன்ற மாநிலச் செயலாளர் துரை சேகரன் ஆகியோர் வலியுறுத்தி சிறப்புரையாற்றினர்.

மேலும், இதே கோரிக்கையை வலியுறுத்தி, தமிழ்நாடு அன்பு வழி அறப்பணி மன்ற மாநில துணைத் தலைவர் சேவை கோவிந்தராஜ், துணைச் செயலாளர்கள், ச. கார்த்திகேயன், டி.பி.ஆர் போஸ், தஞ்சை காந்தி இயக்க அறக்கட்டளை அறங்காவலர் பேராசிரியர் விஜய ராமலிங்கம், மகாத்மா காந்தி நற்பணி மன்ற மாநில துணைத்தலைவர் வழக்கறிஞர். மரிய ஜெனட் ஜோசி, நாமக்கல் நல்லோர் வட்ட பொறுப்பாளர் தில்லை சிவகுமார், வெள்ளியணை பஞ் சாயத்து தலைவர் திரு சுப்பிரமணியம், திண்டுக்கல் இயற்கை மருத்துவர் தேவராஜ் ஈஸ்வரன், காந்திய ஆதரவாளர்கள் முருகேசபாண்டியன், ராஜசேகரன் மற்றும் அருண் பாரி ஆகியோர் பேசினர்.

இறுதியாக, வருகின்ற உள்ளாட்சித் தேர்தலில் வாக்கை விற்காமல் மக்கள் நலனுக்கு பாடுபடக்கூடிய நல்லவர்களுக்கு வாக்களிக்க பொது மக்களைக் கோரியும், பொதுச் சேவை பெறும் உரிமைச் சட்டத்தை தமிழக அரசு விரைவில் நிறைவேற்ற வேண்டும் எனக் கோரியும் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேற்படி இயற்றப்பட்ட தீர்மானங்களை காந்திய கூட்டியக்கத்தில் உள்ள ஒவ்வொரு அமைப்பும் தனித்தனியாக தமிழக அரசுக்கு அனுப்பி, பொதுமக்கள் மற்றும் தமிழக அரசின் கவனத்தை ஈர்க்க வேண்டும் என்றும் தீர்மானிக்கப்பட்டது. 

இந்தக்கூட்டத்தின் நன்றி உரையை தமிழ்நாடு அன்பு வழி அறப்பணி மன்ற மாநிலச் செயலாளர் நி. ராமலிங்கம் ஆற்றினார். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TNGovt immediately pass the Public Service Rights Act


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->