"நம்பர் ஒன் நடிகர் மு.க ஸ்டாலின்" தான்..!! முதல்வரை கலாய்த்த அண்ணாமலை..!! - Seithipunal
Seithipunal


கோவையில் உள்ள தனியார் ஓட்டலில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தமிழக அரசையும் முதல்வர் மு.க ஸ்டாலினையும் கடுமையாக விமர்சனம் செய்தார். செய்தியாளர்களை சந்திப்பில் பேசியதாவது "தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனமான ஆவின் ஆரஞ்சு நிற பால் பாக்கெட் விலை 12 ரூபாய் உயர்த்தப்பட்ட பிறகு 5 லிட்டர் பால் பாக்கெட்டுகள் விற்பனை தமிழகத்தில் குறைந்துள்ளது. பெரும்பாலானோர் நீல நிற பால் பாக்கெட்டுக்கு மாறிவிட்டனர்.

இப்பொழுது தமிழகத்தில் நெய் விலையும் உயர்த்தி விட்டனர். அமுல் நிறுவனத்தின் நெய் உடன் ஒப்பிடுகையில் இது 35 ரூபாய் அதிகம். திமுகவில் சம்பந்தம் செய்துள்ள குடும்ப உறுப்பினர்கள் தற்பொழுது பால் தொழிலை ஆரம்பித்துள்ளனர். அவர்களுக்காக ஆவின் நிறுவனத்தில் பொருட்கள் விலை உயர்த்தப்படுகிறது. இதை இல்லை என்று யாராலும் மறுக்க முடியாது" என குற்றம் சாட்டினார்.

அப்பொழுது செய்தியாளர் ஒருவர் தமிழகத்தின் நம்பர் ஒன் நடிகர் யார்..? என கேள்வி எழுப்பினர். அதற்கு "தமிழகத்தின் நம்பர் ஒன் நடிகர் நம் முதல்வர் ஸ்டாலின் தான்" என கிண்டலாக பதில் அளித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TNBJP Annamalai criticized number one actor was CM Stalin


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->