தமிழகத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ. 10,000 நிவாரண நிதி.. வெளியான அறிக்கை.! - Seithipunal
Seithipunal


கன மழையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தமிழக அரசு உடனே நிவாரணம் வழங்க வேண்டும் என தமிழ்நாடு முஸ்லீம் லீக் கட்சி தலைவர் வி எம் எஸ் முஸ்தபா தெரிவித்துள்ளார்.

இது குறித்து வி.எம்.எஸ்.முஸ்தபா வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. மேலும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாகவும் கனமழை பெய்துவருகிறது. இதனால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் கனமழை பெய்துவருகிறது. மழையால் பல இடங்கள் வெள்ளக்காடாக காட்சியளித்து வருகிறது.

சாலைகளில் மழை நீர் தேங்கி வெள்ளம் ஏற்பட்டது. மேலும் தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்ததால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். இதில், அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் நீரில் அடித்துச் செல்லப்பட்டன. கனமழை கொட்டி தீர்த்தது. இதன் காரணமாக அருகில் உள்ள நீர் நிலைகள் முழுவதுமாக நிரம்பி உபரி நீர் வெளியேறி வருகிறது.

தமிழகத்தில் சமீபத்தில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக சுமார் 24 மாவட்டங்களில் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. சுமார் 50,000 ஹெக்டேர் பயிர்கள் மழையால் பாதிக்கப்பட்டுள்ளன. 526 ஹெக்டேர் தோட்டக் கலைப் பயிர்கள் அழிந்துள்ளன. 12 மாவட்டங்கள் மழையால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன. இதுவரை மழை, வெள்ள பாதிப்பில் 54 பேர் உயிரிழந்துள்ளனர்.

மழை சற்றே ஓய்ந்துள்ள நிலையில், கடந்த சில நாட்களாக மீண்டும் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்ய தொடங்கியுள்ளதால், மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர். நீர்நிலைகளில் இருந்து திறந்துவிடப்படும் நீர்களாலும், தொடர்ந்து மழை பெய்து வருவதன் காரணமாகவும், குடியிருப்பு பகுதிகளில் வெள்ள நீர் புகுந்து அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் நீரில் அடித்துச் செல்லப்பட்டன.

கனமழை காரணமாக வேலைக்கு செல்ல முடியாமல், வருவாயின்றி தவித்து வரும் மக்கள் வாழ்வதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர். இப்படி பல்வேறு இன்னல்களை சந்தித்து வரும் தமிழக மக்களுக்கு வெள்ள நிவாரண நிதி வழங்குவதில் தொடர்ந்து சுணக்கம் காட்டி வருகிறது. 

கடந்த காலங்களில் இதே போன்று பேரிடர் காலங்களில் போதெல்லாம் அப்போதையை அரசு வழங்கிய நிவாரண நிதி போதுமானதா இல்லை என எதிர்கட்சியாக இருந்து குற்றச்சாட்டியது. ஆனால் தற்போது ஆளும் கட்சியாக மாறியுள்ள திமுக, வெள்ள நிவாரண நிதி தராமல் காலம் தாழ்த்தி வருவது சில சந்தேகங்களை ஏற்படுத்துகிறது.

விரைவில் உள்ளாட்சி தேர்தலை நடத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ள நிலையில், தேர்தல் நேரத்திற்கு முன்பாக வெள்ள நிவாரண நிதி மக்களுக்கு வழங்கினால், அது உள்ளாட்சி தேர்தலில் திமுகவிற்கு சாதகமாக அமையும் என்ற வகையில் திமுக அரசு காலம் தாழ்த்தி வருவதாக தெரிகிறது. 

ஆகவே, வெள்ள நிவாரண நிதி வழங்குவதில் திமுக அரசு சுயநலம் பார்க்காமல், மக்களின் பொதுநலம் மீது அக்கறை கொண்டு, இனியும் கால தாமதம் செய்யாமல் வெள்ள நிவாரண நிதி வழங்க வேண்டும் என வலியுறுத்துவதோடு, அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா 10 ஆயிரம் ரூபாய் வெள்ள நிவாரண நிதி வழங்க வேண்டுமெனவும் என தமிழக அரசை தமிழ்நாடு முஸ்லிம் லீக் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tn muslim league party statement for rain


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->