எந்த கட்சிக்கும் ஆட்சி அமைக்க பெரும்பான்மை இல்லை... அதிரவைக்கும் தேர்தல் முன்னிலை நிலவரம்!
TN Election Results 2026 TVK Emerges as Single Largest Party CM Stalin Trails
தமிழகத்தின் 234 சட்டமன்றத் தொகுதிகளுக்குக் கடந்த ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெற்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தபால் வாக்குகளைத் தொடர்ந்து மின்னணு இயந்திரங்களில் பதிவான வாக்குகளின் முன்னிலை நிலவரங்கள் தற்போதைய அரசியல் சூழலில் பெரும் மாற்றத்தைக் கோடிட்டுக் காட்டுகின்றன.
காலை 10:30 மணி நிலவரப்படி, 102 இடங்களில் முன்னிலை வகித்துத் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) முதலிடத்தில் உள்ளது. அதிமுக கூட்டணி 81 இடங்களுடன் இரண்டாம் இடத்திலும், ஆளும் திமுக கூட்டணி 51 இடங்களுடன் மூன்றாம் இடத்திலும் உள்ளன. பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகுதிகளிலும் தவெக தலைவர் விஜய் தொடர்ந்து முன்னிலை வகிக்கிறார். எடப்பாடி தொகுதியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது முன்னிலையைத் தக்கவைத்துள்ளார்.
மிகவும் எதிர்பாராதத் திருப்பமாக, முதல்வர் மு.க.ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் நான்காவது சுற்றிலும் தொடர்ந்து பின்னடைவைச் சந்தித்து வருகிறார். தற்போதைய நிலவரப்படி எந்தவொரு கட்சிக்கும் ஆட்சி அமைக்கத் தேவையான அறுதிப் பெரும்பான்மை இன்னும் கிடைக்கவில்லை.
English Summary
TN Election Results 2026 TVK Emerges as Single Largest Party CM Stalin Trails