#BREAKING || தமிழக முதல்வர் சற்றுமுன் உலக தமிழர்களுக்கு வெளியிட்ட வீடியோ.! - Seithipunal
Seithipunal


தமிழகம் முழுவதும் பொங்கல் பண்டிகை ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. அதன்படி இந்த ஆண்டு தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை நாளை கொண்டாடப்படவுள்ளது. இந்த பொங்கல் பாண்டியை முன்னிட்டு பல்வேறு தலைவர்களும் மக்களுக்கு பொங்கல் தின வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். 

அந்த வகையில், தமிழக முதல்வர் எடப்பாடி கே பழனிசாமி காணொளி கட்சி மூலயமாக உலக தமிழ் மக்களுக்கு தனது பொங்கல் தின நல்வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். முதல்வரின் அந்த வாழ்த்துச் செய்தியில், 

"உலகெங்கும் வாழும் தமிழ் மக்களுக்கு வணக்கம். இந்த ஆண்டு நல்ல மழை பொழிந்து ஏரி -குளங்கள் நிரம்பி உழவர் மற்றும் பொது மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உங்களின் வாழ்வு நலம் பெற பல்வேறு நலத்திட்டங்களை இந்த அரசு தொடர்ந்து வழங்கும். 

உங்கள் அனைவருக்கும் எனது இனிய தைப்பொங்கல் மற்றும் தமிழர் திருநாள் நல்வாழ்த்துக்களை அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன். நன்றி வணக்கம்" என்று தெரிவித்துள்ளார்.

இதேபோல், தமிழக மக்களுக்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், "பொங்கல் பண்டிகை ஒவ்வொருவரின் உள்ளத்திலும் மிகுந்த செழிப்பை கொண்டுவர விரும்புகிறேன். தமிழர் வழியில் செழுமை நிலையை இனி வரும் நாட்களிலும் உயர்த்திப்பிடித்து சிறந்து வாழ்த்திட முன்வருவோம். அறுவடையின் திருநாளான பொங்கல் நம் குடும்பங்களிடையே மகிழ்ச்சி, செழிப்பை திரளாக கொண்டு வருகிறது." என்று தெரிவித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

TN CM PONGAL 2021 WISH


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!


செய்திகள்



Seithipunal
--> -->