இன்னும் இருபது நாள் பொறுத்துக்கோங்க! இலக்கு வைத்து அறிவித்த முதல்வர் பழனிசாமி! எதற்காக தெரியுமா?! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் 15 லிருந்து 20 நாட்களுக்குள் வெங்காயத்தின் விலை குறையும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்

கோவை சென்ற முதலமைச்சர் பழனிசாமி, விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, உச்சநீதிமன்ற தீர்ப்பின்படிதான் தேர்தல் ஆணையம் தேர்தல் தேதியை அறிவித்திருக்கிறது. இந்த தேர்தலில் அதிமுக கண்டிப்பாக வெற்றிபெறும் என்றும் தெரிவித்துள்ளார். 

தேர்தலை தள்ளிப்போடுவதே ஸ்டாலினின் நோக்கம், உள்ளாட்சித் தேர்தல் குறித்து ஸ்டாலின் பொத்தாம் பொதுவாக குறைகளை கூறி வருகிறார். எந்த வார்டில் பிரச்சனை, இட ஒதுக்கீட்டில் என்ன மாதிரியான குறை என்பதை தெளிவாக அவர் சுட்டிக்காட்ட வேண்டும். உள்ளாட்சி தேர்தல் தள்ளிப்போவதற்கு யார் காரணம் என்பதை ஸ்டாலின் காட்டிவிட்டார் என்றும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார். 

வெங்காயம் உற்பத்தி செய்யப்படும் அண்டை மாநிலங்களில் மழை பாதிப்பால் விளைச்சல் குறைந்து, வரத்து குறைந்ததால் வெங்காயத்தின் விலை அதிகரித்துள்ளது. தமிழகத்தில் பயிரிடப்பட்டுள்ள வெங்காயம் 15 லிருந்து 20 நாட்களுக்குள் சந்தைக்கு வரும் என்பதால் விலை குறையும் என முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TN CM announced onion rate will reduce within 20 days


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->