கடலுக்கடியில் திருமணம்.. வாழ்க்கையில் மறக்கமுடியாத பரிசை கொடுத்த கணவன்.! - Seithipunal
Seithipunal


திருவண்ணாமலை மாவட்டத்தைச் சார்ந்த ஐ.டி ஊழியர் சின்ன துரை. கோயம்புத்தூர் மாவட்டத்தைச் சார்ந்த ஸ்வேதா. இவர்கள் இருவரின் திருமணம் நடைபெறுவதாக பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட நிலையில், தற்போது பொழுதுபோக்கிற்காக ஆழ்கடல் நீச்சல் பயிற்சியில் சின்ன துரை ஈடுபட்டு வந்துள்ளார்.

இந்நிலையில் தனது திருமணத்தை வழக்கமாக இல்லாமல், வித்தியாசமாக நடத்த நினைத்து கடலுக்கடியில் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று நினைத்துள்ளார். தனது விருப்பத்தை வீட்டில் கூறவே, ஆழ்கடலில் திருமணம் செய்துகொள்ள பெற்றோரும் ஒப்புக் கொண்டுள்ளனர். 

இதனையடுத்து, புதுச்சேரியை சேர்ந்த ஆழ்கடல் நீச்சல் பயிற்சியாளர் மணமக்களுக்கு நீச்சல் பயிற்சியும் அளித்து உள்ளார். இந்நிலையில், நேற்று காலை பாரம்பரிய உடைகள் அணிந்து, படகில் கடலுக்கு அழைத்து செல்லப்பட்ட மணமக்கள், நீலாங்கரை கடலுக்கு அடியில் சுமார் 30 அடி ஆழத்தில் மலர்களைக் கொண்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மேடையில் திருமணம் செய்துள்ளனர். 

கடலுக்கு உள்ளேயே வேட்டி மற்றும் சேலை என பாரம்பரிய உடைகளுடன் சென்ற மணமக்கள், கடலில் மாலைமாற்றிக்கொண்டு மணமகன் தாலி காட்டினார். இவர்களின் திருமண வாழ்க்கை மறக்க முடியாத நினைவுகளுடன் தொடங்கியுள்ளது. 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tiruvannamalai Coimbatore Couple Marriage under the sea at Chennai Neelankarai


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->