திருநெல்வேலி கொலை வழக்கு! நடவடிக்கை எடுக்காத காவல்துறைக்கு கடும் எச்சரிக்கை! -நயினார் நாகேந்திரன்
Tirunelveli Murder Case Stern Warning Police Failure Take Action Nainar Nagendran
திருநெல்வேலி மாவட்டத்தில் நடந்த விவசாயி கொலைச் சம்பவம் தீவிர அரசியல் எதிரொலியை ஏற்படுத்தியுள்ள நிலையில், உடனடி நடவடிக்கை எடுக்குமாறு நயினார் நாகேந்திரன் காவல்துறையை வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட பதிவில்,"மூன்றடைப்பு பகுதியில் பட்டியலினத்தைச் சேர்ந்த விவசாயி ஆறுமுகம் கொலை செய்யப்பட்டு பல நாட்கள் கடந்தும் குற்றவாளிகள் பிடிபடாததால் ஏற்பட்ட மனவேதனையில், அவரது மகள் தற்கொலை செய்து கொண்டதாக வெளியாகியுள்ள தகவல் மிகுந்த அதிர்ச்சியளிப்பதாக தெரிவித்துள்ளார்.

மேலும், குற்றவாளிகளை விரைவாக கண்டுபிடிக்காத காவல்துறையின் தாமதமான செயல்பாடே இன்னொரு நிரபராத உயிரிழப்புக்கு காரணமாக அமைந்துள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
பாரதிய ஜனதா கட்சி மாநிலத் தலைவர் எனும் முறையில், தற்போதைய ஆட்சியில் சட்டம் ஒழுங்கு நிலை பாதிக்கப்பட்டுள்ளதாகவும், காவல்துறை இனியும் அலட்சியமாக அல்லாமல் துரிதமாக செயல்பட்டு குற்றவாளிகளை கைது செய்து, பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.
மேலும், வரும் நாட்களில் மக்கள் தங்களின் தீர்ப்பை வழங்க உள்ள சூழலில், காவல்துறை தனது கடமையை நேர்மையாக நிறைவேற்ற வேண்டும் என்பதையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
English Summary
Tirunelveli Murder Case Stern Warning Police Failure Take Action Nainar Nagendran