புதுச்சேரியில் புதிய கூட்டணி கணக்கு: நேயம் மக்கள் கழகத்திற்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு...! - தவெக
New Alliance Calculus Puducherry 2 Constituencies Allocated Neyam Makkal Kazhagam TVK
புதுச்சேரி அரசியல் வட்டாரத்தில் புதிய கூட்டணி கணக்குகள் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளன. மாநில வளர்ச்சியை முன்னிறுத்தி, கூட்டணியை வலுப்படுத்தும் நோக்கில், தமிழக வெற்றிக் கழகம் தனது தொகுதி பங்கீட்டில் முக்கிய மாற்றத்தை அறிவித்துள்ளது.
அதன்படி, கூட்டணியில் இணைந்துள்ள நேயம் மக்கள் கழகத்திற்கு, உருளையன்பேட்டை மற்றும் தட்டாஞ்சாவடி ஆகிய இரண்டு முக்கிய சட்டமன்றத் தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில், புதுச்சேரியில் நடைபெறவுள்ள 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, முதற்கட்டமாக 30 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது கூட்டணி விரிவாக்கத்தின் ஒரு பகுதியாக இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், நேயம் மக்கள் கழகத்தின் நிறுவனர் நேரு (எ) குப்புசாமி, தமிழக வெற்றிக் கழகத்துடன் இணைந்து செயல்பட முன்வந்ததையடுத்து, இரு கட்சிகளும் இணைந்து தேர்தலை எதிர்கொள்ள ஒப்பந்தம் உறுதிசெய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தொகுதி பங்கீடு, வெற்றித் தலைவரின் ஒப்புதலுடன் இறுதி செய்யப்பட்டதாக கட்சியின் பொதுச் செயலாளர் என். ஆனந்த் தெரிவித்துள்ளார். இதன் மூலம் புதுச்சேரி தேர்தல் அரசியலில் புதிய பரபரப்பு உருவாகியுள்ளது.
English Summary
New Alliance Calculus Puducherry 2 Constituencies Allocated Neyam Makkal Kazhagam TVK