உலகிற்கு வழிகாட்டும் ஞானி வள்ளுவர்: திருவள்ளுவர் நாளில் பிரதமர் மோடி பதிவு...!
Thiruvalluvar sage who guides world Prime Minister Modi post Thiruvalluvar Day
திருவள்ளுவர் தினத்தை ஒட்டி, பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் தளத்தில் சிறப்பு பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில் அவர் தெரிவித்திருப்பதாவது,"திருவள்ளுவர் தினமான இன்றைய நாளில், மனிதகுலத்திற்கு வழிகாட்டும் ஆழமான சிந்தனைகளும், காலம் கடந்தும் ஒளிரும் படைப்புகளும் கொண்ட மகத்தான புலவர் திருவள்ளுவருக்கு நான் பணிவுடன் வணக்கம் செலுத்துகிறேன்.

நல்லிணக்கம், கருணை, மனிதநேயம் ஆகிய மதிப்புகளால் கட்டமைக்கப்பட்ட ஒரு சமூகம் உருவாக வேண்டும் என்ற உறுதியான நம்பிக்கையுடன் அவர் திகழ்ந்தார்.
தமிழ்க் கலாச்சாரத்தின் உன்னத பண்புகளுக்கு உயிரோட்டமான சின்னமாக விளங்கும் திருவள்ளுவர், தனது அபார அறிவாற்றலால் உருவாக்கிய திருக்குறள் மூலம் உலகமெங்கும் ஒளிவீசுகிறார்.
அந்த உயரிய ஞானக் களஞ்சியத்தை அனைவரும் வாசித்து, அதன் கருத்துகளை வாழ்க்கையில் பின்பற்ற வேண்டும் என நான் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் என பிரதமர் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.
English Summary
Thiruvalluvar sage who guides world Prime Minister Modi post Thiruvalluvar Day