விசிக திருமாவளவன் மனரீதியாக ஆதரிக்கிறார்... ஆனால் கூட்டணி...? - நயினார் நாகேந்திரன்
Thirumavalavan supports him mentally but what about alliance Nainar Nagendran
திருநெல்வேலி மாவட்டத்தில் பாஜக மாநில தலைவர் 'நயினார் நாகேந்திரன்' பத்திரிக்கையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் தெரிவித்ததாவது," காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, பீகார் மாநிலத்தில் 65 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து கடுமையான குற்றச்சாட்டினை முன் வைத்து வருகிறார்.

அவருடன் துணையான தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேரணியாக சென்று இருப்பது வருத்தம் அளிக்கிறது.மேலும், ராகுல்காந்தி குறிப்பிட்டுள்ள 65 லட்சம் பேர் இறந்தவர்கள் மற்றும் வெளியூர்களில் குடிபெயர்ந்தவர்கள்.
அவர்களை மீண்டும் வாக்காளர் பட்டியலில் சேர்க்க ராகுல்காந்தியுடன் சேர்ந்து மு.க.ஸ்டாலினும் ஆதரவு தெரிவித்து வருகிறாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.இதனிடையே,அமைச்சர் சேகர்பாபு என்னை கடுமையாக விமர்சித்து வருகிறார்.
அவர் ஒரு பயத்தில் என்னை அப்படி பேசி வருகிறார். ஆனாலும் பரவாயில்லை. விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் மனரீதியாக எங்களை ஆதரிக்கிறார்.
அவர் எங்கள் கூட்டணிக்கு வருகிறாரா? என்பதை அவரிடம் தான் கேட்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார். இது தற்போது அரசியல்வட்டாரத்தில் சற்று சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Thirumavalavan supports him mentally but what about alliance Nainar Nagendran