ஸ்டாலினுக்கு துரோகம் இழைத்த திருமாவளவன்.?! அனல் பறக்கும் ஆட்டத்தால் விழி பிதுங்கும் திமுக.!  - Seithipunal
Seithipunal


ராணிப்பேட்டை மாவட்டத்தில் இருந்த புத்த விகார் மற்றும் அம்பேத்கர் சிலையை விசிக தலைவர் திருமாவளவன் திறந்து வைத்தார் பின்னர் அங்கு உரையாற்றிய போது தான் முதலமைச்சராக வந்தால் முதலில் மதுவை ஒழிப்பேன் என்று கூறினார். 

இதைக் கேட்ட அவரது தொண்டர்கள் கைதட்டி ஆரவாரபடுத்தினர். இந்த கருத்தை எதிர்பார்த்து காத்திருந்தது போல அவர்களது செயல் இருந்ததை தொடர்ந்து உடனடியாக அவர்களை அமைதிப்படுத்தி பேசிய திருமாவளவன், "முதலமைச்சராக வேண்டும் என்று ஆசைப் படக்கூடாதா? ஆசைப்பட்டால் என்ன தவறு.?" என்று கேள்வி எழுப்பினார். 

திமுகவுடன் கூட்டணியில் இருக்கும் நேரத்தில் ஸ்டாலினை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தி அரசியல் செய்து வரும் சூழலில் திருமாவளவன் முதல்வர் பதவிக்கு ஆசைப்படக்கூடாதா என்று கேள்வி எழுப்பியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

சமீபத்திய மனு ஸ்மிருதி பிரச்சனைக்கு கூட ஸ்டாலின் திருமாவளவனுக்கு ஆதரவு தெரிவித்தார். இருப்பினும், திருமாவளவனுக்கு திமுகவுடன் என்ன மனக்கசப்பு என்பது புரியவில்லை. சட்டப்பேரவை தேர்தலுக்கு சில மாதங்கள் இருக்கும் நிலையில், கூட்டணியில் இதுபோன்ற பிரச்சினைகள் அரசியல் களத்தை சூடாக்கியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

thirumavalavan speech in ranipettai


கருத்துக் கணிப்பு

ரஜினி தனது அரசியல் நிலைப்பாட்டை வரும் ஜனவரிக்குள் அறிவிப்பாரா?
கருத்துக் கணிப்பு

ரஜினி தனது அரசியல் நிலைப்பாட்டை வரும் ஜனவரிக்குள் அறிவிப்பாரா?
Seithipunal