திருமாவளவன், ஜவாஹிருல்லா ஆகியோர் தேசிய விரோதிகள்!....எச்.ராஜா மீது பாய்ந்தது பயங்கர வழக்கு! - Seithipunal
Seithipunal


வன்முறையை தூண்ட முயற்சித்தல், கலவரத்தை தூண்டுதல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ்,  பா.ஜ.க. ஒருங்கிணைப்பு குழு தலைவர் எச்.ராஜா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

சென்னை மீனம்பாக்கத்தில் உள்ள சர்வதேச பன்னாட்டு விமான நிலையத்தில் கடந்த 7-ம் தேதி பா.ஜ.க. ஒருங்கிணைப்பு குழு தலைவர் எச்.ராஜா செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், த.மு.மு.க. தலைவர் ஜவாஹிருல்லா, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் ஆகியோர் தேசிய விரோதிகள் என்றும், அவர்கள் 2 பேரையும் கண்காணிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

இந்த விவகாரத்தில், மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில், வன்முறையை தூண்டும் வகையில் பேசிய எச்.ராஜா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று  சென்னை விமான நிலைய காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

இதையடுத்து,வன்முறையை தூண்ட முயற்சித்தல், கலவரத்தை தூண்டுதல்,பொய்யான தகவல் பரப்புதல், இருதரப்பினர் இடையே பகைமையை வளர்த்தல் ஆகிய 4 பிரிவுகளின் கீழ் எச்.ராஜா மீது சென்னை விமான நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Thirumavalavan and jawahirullah are national enemies h raja has a terrible case


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->