கொஞ்சம் யோசிச்சு சொல்லுங்க..விஜய் இருக்காரு.. அமைச்சரவை பங்கும் கேட்டு திமுக மீது காங்கிரஸ் அழுத்தம்..ஸ்டன் ஆன ஸ்டாலின்! - Seithipunal
Seithipunal


2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு கூட்டணி பேச்சுவார்த்தைகள் தீவிரமடைந்துள்ள நிலையில், இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி திமுக மீது அழுத்தம் கொடுக்கத் தொடங்கியுள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. கூடுதல் தொகுதிகள் மட்டுமல்லாமல், முதன்முறையாக மாநில அமைச்சரவையில் பங்கு மற்றும் அதிகாரப் பகிர்வையும் காங்கிரஸ் கோரிவருகிறது.

தி.மு.க. இன்னும் இடப்பங்கீட்டு பேச்சுவார்த்தைக் குழுவை அமைக்கவில்லை. பொங்கலுக்கு பின்பே அந்தக் குழு அமைக்கப்படும் என்று கூறப்படுகிறது. 2021 சட்டமன்றத் தேர்தலில் 25 தொகுதிகளில் போட்டியிட்டு 18 இடங்களில் வெற்றி பெற்ற காங்கிரஸ், இந்த முறை 35 முதல் 50 தொகுதிகள் வரை கோருகிறது. அதோடு, எம்எல்ஏ சீடுகள் மட்டுமல்ல, அமைச்சரவை பதவியும், ஆட்சியில் நேரடி பங்கும் வேண்டும் என திமுகவிடம் வலியுறுத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தற்போது தமிழக அமைச்சரவையில் 35 அமைச்சர்கள் திமுகவைச் சேர்ந்தவர்கள். கூட்டணிக் கட்சிகளுக்கு இடமில்லை. இந்த சூழலில், அடுத்த தேர்தலில் திமுக தனிப்பெரும்பான்மை பெறாமல், மைனாரிட்டி இடங்களில் போட்டியிட வேண்டும் அல்லது ஆந்திரப் பிரதேச மாடலைப் போல தனிப்பெரும்பான்மை கிடைத்தாலும் கூட்டணிக் கட்சிகளுக்கு அமைச்சரவையில் இடம் அளிக்க வேண்டும் என காங்கிரஸ் அழுத்தம் கொடுத்து வருவதாக கூறப்படுகிறது. அதிகாரப் பங்கீட்டின் ஒரு பகுதியாக மாநிலங்களவையில் ஐந்து உறுப்பினர் பதவிகளையும் காங்கிரஸ் கேட்கிறது என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

காங்கிரஸ் தலைவர்கள் சிலர் வெளிப்படையாக, “சட்டமன்றத் தேர்தலில் அதிக இடங்களையும் அதிகாரத்தில் பங்கையும் கேட்பது எங்கள் உரிமை” என்று கூறியுள்ளனர். மேலும், “நாங்கள் கேட்பதை விட அதிகமாக தர தயாராக இருப்பது விஜயின் தமிழக வெற்றிக் கழகம். துணை முதல்வர் பதவி, அமைச்சரவை இடங்கள், மாநிலங்களவை பதவிகள் அனைத்தையும் தவெக தர தயாராக உள்ளது. இனி முடிவு திமுக கையில்தான்” என மறைமுகமாக அழுத்தம் கொடுக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.

இதற்கிடையே, திமுகவின் முக்கிய கூட்டணிக் கட்சியான விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் அதிகாரப் பங்கீடு குறித்து கேள்வி எழுப்பியுள்ளது. ஆட்சியில் கூட்டணிக் கட்சிகள் ஏன் புறக்கணிக்கப்படுகின்றன என்ற விமர்சனமும் முன்வைக்கப்படுகிறது. இதனால், திமுக கூட்டணிக்குள் அழுத்தங்கள் அதிகரித்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

முதல்வர் மு.க.ஸ்டாலினை ராகுல் காந்தி “அண்ணன்” என்று அழைக்கும் அளவுக்கு தேசிய தலைமையில் நல்ல உறவு இருந்தாலும், தமிழக காங்கிரஸ் தலைமை திமுகவுக்கு நெருக்கடி கொடுத்து வருவது கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. முன்பு காங்கிரசுக்கு திமுக தவிர வேறு பெரிய அரசியல் தேர்வு இல்லாத நிலை இருந்தது. ஆனால் தற்போது தமிழக வெற்றிக் கழகம் என்ற புதிய ஆப்ஷன் உருவாகியிருப்பதே இந்த அழுத்தங்களுக்குப் பின்னணி என அரசியல் வட்டாரங்கள் கணிக்கின்றன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Think about it a bit and tell me Vijay is there Congress is pressuring DMK to also take on a cabinet role Stalin is stunned


கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?



Advertisement

கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?




Seithipunal
--> -->