'மக்கள் பிரதிநிதி எதற்கு..? வெறி பிடிச்சுப்போய் கிடக்குதுங்க..' நீர்வளத்துறையை சாடிய செல்வப்பெருந்தகை..!
The water resources department is obsessed with the water resources department says selvaperunthagai
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. இதன் காரணமாக அணைகள், ஏரிகள், குளங்கள் என நீர்நிலைகள் நிறைந்து வருகின்றன. செம்பரம்பாக்கம் ஏரிக்கு வரும் நீரின் வரத்து அதிகரித்துள்ளது. ஏரிக்கு வரும் நீர்வரத்து இன்று (அக்டோபர் 22) காலை நிலவரப்படி 2170 கன அடியாக அதிகரித்துள்ளது. தொடர்ந்து மழை பெய்து கொண்டே இருப்பதால் ஏரியின் நீர்மட்டம் 20.84 அடியாக உயர்ந்துள்ளது. இவ்வாறு நீர்மட்டம் உயருவதால் பாதுகாப்பு கருதி, செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து விநாடிக்கு 500 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
இந்நிலையில் மெ்பரம்பாக்கம் ஏரியில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டது குறித்து, தொகுதியின் மக்கள் பிரதிநிதியான தன்னிடம் ஏன் தெரிவிக்கவில்லை என தமிழக காங்கிரஸ் தலைவரும், ஸ்ரீபெரும்புதூர் சட்டசபை தொகுதி எம்எல்ஏவுமான செல்வப்பெருந்தகை அதிகாரிகளை மீது அதிருப்தி வெளியிட்டுள்ளார்.
இதனையடுத்து செம்பரப்பாக்கம் ஏரியை பார்வையிட்ட செல்வப்பெருந்தகை கூறியதாவது:

ஒரு மக்கள் பிரதிநிதியாக சேர்மனுக்கு தெரியல மந்திரிக்கு தெரியல. அமைச்சருக்கு தெரியல.எம்எல்ஏவுக்கு தெரியல. எம்பிக்கு தெரியல. நீங்களே திறந்து விடுறீங்கனா எப்படி சார் அது. இந்த துறை வந்து அரசு துறை தானே? நீர்வளத்துறை அரசுத்துறைதானே? மக்கள் பிரதிநிதியிடம் ஒரு வார்த்தை சொல்லலாம். மரபு என்ன?காலம் காலமாக எப்பவுமே சொல்வீங்க நானும் 03 வருஷமா திறந்து விட்டுருக்கேன். போன வருஷம் சொல்லாம கொள்ளாம திறந்துவிட்டுட்டீங்க. தப்பு கிடையாது. திறங்க. நீங்களே ஆட்சியாளர்களாக, நீங்களே மக்கள் பிரதிநிதிகளாக மாறுங்கள். மக்களுக்கு நல்லது செய்யுங்கள். நான் தானே ஊர் ஊராக போகப்போறேன். '500 அடி திறந்துருக்காங்க. கொஞ்சம் கவனமா இருங்க' என சொல்லிக்கொண்டு எல்லா ஊருக்கும் போகப்போறேன். 12, 13 ஊருக்கு 'புரோகிராம்' போட்டு போகப்போறேன். இதெல்லாம் தப்பு. இத சொல்லணும்ல. என்று கடிந்துக்கொண்டுள்ளார்.
அத்துடன், ''நீங்களே மக்கள் பிரதிநிதியாகிவிட்டால் அப்புறம் எதற்கு கவர்மென்ட். அதிகாரிகளே 'கவர்மென்ட்ட' 'ரன்' பண்ணிக்கலாமே? இந்தத் துறை யார் கட்டுப்பாட்டில் இருக்கிறதுனே தெரியல போங்க எனக்கூறிவிட்டு சென்ற அவரை, அதிகாரிகள் சமாதானப்படுத்த முயன்றனர்.
அப்போது அவர் கூறுகையில், நேற்று 12 மணியில் இருந்து டிவியில் ஓடிக் கொண்டிருக்கு. 04 மணிக்கு திறக்கப் போறாங்கனு. பூசணிக்காய் உடைக்கிறீங்க. பூஜை போடுறீங்க. தேங்காய் உடைக்கிறீங்க. மக்கள் பிரதிநிதிக்கு ஒரு சேர்மன் இருக்கிறார். ஒன்றிய செயலாளர் இருக்கிறார். எம்பி எம்எல்ஏ இருக்கிறார்கள். ஒரு வார்த்தை சொன்னால் என்ன கெட்டுப்போயிடும் உங்களுக்கு. அவ்வளவு 'பிரஸ்டீஜ்'. இவங்கல்லாம் திறக்கக்கூடாது தண்ணீய. இவங்கெல்லாம் தொடக்கூடாது. வெறி பிடிச்சுப்போய் கிடக்குதுங்க இந்தத்துறை எனக்கூறிவிட்டு கோபமாக சென்றார்.

அதன் பிறகு காரில் ஏறி அமர்ந்த செல்வப்பெருந்தகை, அங்கிருந்த அதிகாரி ஒருவரிடம் கூறுகையில், ''இவங்கெல்லாம் வரக்கூடாது. மக்கள் பிரதிநிதி வரக்கூடாது. இன்ஜீனியர் நாங்கள் பார்த்துக் கொள்வோம் என்றால் அப்புறம் எதுக்கு மக்கள் பிரதிநிதி. எப்படி சிஎம் உழைக்கிறார்னு தெரியும். டெபுடி சிஎம் உழைக்கிறார். அவங்கவுங்க ராத்திரி பகல் உழைக்கிறாங்க.எங்களை கூப்பிட்டு... இப்ப நான் 10 கிராமத்துக்கு போகப்போறேன். நான்தானே எல்லா கிராமத்துக்கும் போயிட்டு வந்து எல்லா கிராமத்துக்கும் எச்சரிக்கை சொல்லப்போறோம். சாப்பாடு அரெஞ்ச் பண்ணப்போறோம். நீங்களா பண்ணப்போறீங்க. திறந்துவிட்டு கம்முனு உட்காந்துருக்கீங்க. ஒரு வார்த்தை சொன்னால் என்ன குறைஞ்சு போயிடும்...?
டிவியில பார்த்து விட்டு 04 ,05 மணி நேரமா டிரை பண்ணுறேன். போன எடுக்க மாட்டேன்றீர்கள். எத்தனை மிஸ்டு கால் இருக்கும் எனப் பாருங்கள். அதெல்லாம் பண்ணாதீர்கள். நான் எம்எல்ஏ பொறுமையா போறேன். இன்னொருத்தன் வந்தா பொறுத்துக்குவாங்களா..? மக்கள் பிரதிநிதி வேலைய நீங்களே சேர்த்து செய்யுறீங்கனா அப்புறம் எதற்கு மக்கள் பிரதிநிதி..?.
ஒரு மரபுனு ஒன்னு இருக்குல. காலம் காலமாக பிரிட்டிஷ் ஆட்சிக்காரன் காலத்தில் இருந்து கூப்பிட்டு தான் வெச்சு பூஜை போட்டு திறப்பார்கள். நீங்கள் அதை மாதிரி செய்யுங்கள். எங்களுக்கு இதனால் ஒரு சிறுமையும் இல்லை. சிறுமைப்படுத்துவதாக நினைச்சுக்கிட்டு இருக்கீங்க. நாங்கள் மக்களுக்காக ஓடிக்கொண்டே இருக்கப்போறோம்.'' என்று வேதனையுடன் கூறிவிட்டு செல்வபெருந்தகை அவரது காரில் கிளம்பிச் சென்றார்.
English Summary
The water resources department is obsessed with the water resources department says selvaperunthagai