தவெக பற்றி டெல்லிக்கு போன ரிப்போர்ட்.. விஜய்யோட ரியல் பவர் இதுதனா? இனி விஜய் வேண்டாம்..குஷியான பாஜக.. ஏன் தெரியுமா? - Seithipunal
Seithipunal


தமிழக அரசியல் களத்தில் புதிதாக கால்பதித்துள்ள நடிகர் விஜயின் தமிழக வெற்றி கழகம் (தவெக), வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் தொடக்க நிலையில் 10 சதவீதம் முதல் 15 சதவீதம் வரை வாக்குகளைப் பெறக்கூடும் என டெல்லி பாஜக தலைமையிடம் அனுப்பப்பட்டுள்ள ஒரு ரகசிய அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதே நேரத்தில், இந்த வாக்கு வங்கி தேர்தல் நெருங்கும் போது குறையும் வாய்ப்புள்ளதாகவும் அந்த அறிக்கை எச்சரித்துள்ளதாக கூறப்படுகிறது.

பாஜக உள்கட்சி மதிப்பீட்டின்படி, விஜயின் அரசியல் வருகை குறிப்பாக இளைஞர்கள் மற்றும் முதல்முறை வாக்காளர்கள் மத்தியில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. பாரம்பரிய திராவிடக் கட்சிகளுக்கு மாற்றாக ஒரு புதிய அரசியல் சக்தியை எதிர்பார்க்கும் நகர்ப்புற இளைஞர்கள், விஜயை ஒரு மாற்று முகமாக பார்க்கத் தொடங்கியதே இந்த 10–15 சதவீத வாக்கு கணிப்புக்கு முக்கிய காரணமாக குறிப்பிடப்பட்டுள்ளது. நகர்ப்புற பகுதிகளில் விஜய்க்கு நல்ல வரவேற்பு இருப்பதை பாஜகவும் மறுக்கவில்லை.

இருப்பினும், இந்த ஆரம்பகட்ட எழுச்சி தேர்தல் காலம் வரை நீடிக்குமா என்பது சந்தேகமே என அந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. தேர்தல் நெருங்க நெருங்க திமுக கூட்டணியும், அதிமுக–பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியும் தீவிரமான களப்பணிகள், பிரம்மாண்ட பொதுக்கூட்டங்கள் மற்றும் தொடர்ச்சியான பிரச்சாரங்களை முன்னெடுக்கும் போது, தவெக-வின் வாக்குகள் சிதற வாய்ப்புள்ளதாக பாஜக மதிப்பிடுகிறது.

அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள மற்றொரு முக்கிய காரணம், அமைப்பு ரீதியான கட்டமைப்பு. நடிகர் விஜய்க்கு தனிப்பட்ட செல்வாக்கும் ரசிகர் ஆதரவும் இருந்தாலும், தேர்தல் நேரத்தில் ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் செயல்படும் அளவுக்கு வலுவான பூத் மட்ட அமைப்பு தவெக-விடம் தற்போது இல்லை என்பதே பாஜக கணிப்பு. மேலும், தேர்தல் நெருங்கும்போது “யார் ஆட்சி அமைப்பார்?” என்ற கணக்கே வாக்காளர்களின் மனதில் மேலோங்கும். அப்போது புதிய கட்சிக்கு வாக்களித்தால் வாக்கு வீணாகிவிடுமோ என்ற அச்சத்தில், மக்கள் மீண்டும் பெரிய கூட்டணிகளை நோக்கியே திரும்புவார்கள் என அந்த அறிக்கை கூறுகிறது.

இந்த நிலையில், விஜயின் அரசியல் வருகையை ஒரு சவாலாக பாஜக பார்த்தாலும், நீண்ட காலம் தேர்தல் களத்தில் தாக்குப்பிடிக்கப் போவது பலமான கூட்டணிகளே என்ற நம்பிக்கையிலேயே டெல்லி தலைமையகம் இருப்பதாக சொல்லப்படுகிறது. திமுகவும் தனது வாக்கு வங்கியைத் தக்கவைக்க மக்கள் நலத்திட்டங்கள், தெருமுனை கூட்டங்கள், பொதுக்கூட்டங்கள் என களத்தை தீவிரமாக சூடுபடுத்தி வருகிறது.

மொத்தத்தில், வரவிருக்கும் தேர்தலில் நேரடிப் போட்டி திமுக கூட்டணி மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கிடையேதான் இருக்கும் என்றும், விஜயின் தவெக பெறும் வாக்குகள் இந்த இரு முனைகளுக்கும் இடையே பிரிந்து செல்லும் என்றும் அந்த ரகசிய அறிக்கை கூறுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் விஜயின் அரசியல் எழுச்சி குறித்து டெல்லி பெரிதாக கவலைப்படவில்லை என்றே அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

The report about TVk went to Delhi Is this Vijay real power No more Vijay BJP is weak Do you know why


கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?



Advertisement

கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?




Seithipunal
--> -->