தவெக சின்னத்தை பார்த்து நாடே வியக்கும்! என்ன சின்னம் தெரியுமா?செங்கோட்டையன் வைக்கும் சஸ்பென்ஸ்!
The entire country will be amazed by the Tvk symbol Do you know what the symbol is Sengottaiyan suspense
2026 சட்டசபைத் தேர்தல் நெருங்கிவிட்ட நிலையில், தமிழக வெற்றிக்கழகம் தனது அரசியல் நடவடிக்கைகளை வேகப்படுத்தி வருகிறது. கட்சியின் மூத்த நிர்வாகியான செங்கோட்டையன், தவெக விரைவில் அதிகாரப்பூர்வ சின்னம் பெற உள்ளதாகவும், அந்த சின்னம் வெளியாகும் போது நாடே வியக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
ஈரோடு மாவட்டத்தில் இன்று மக்களை சந்தித்த செங்கோட்டையன், வரவிருக்கும் டிசம்பர் 16 பொதுக்கூட்டத்திற்கான ஏற்பாடுகளை ஆய்வு செய்தார். காவல்துறை சில மாற்றங்களை கேட்டதால், மாற்று இடத்தைத் தேர்வு செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
சங்கத்தில் உரையாற்றிய அவர்,“நாமக்கல் பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி, பெரிய கட்சி நம்மிடத்தில் வந்துவிட்டது என்று சொன்னார். ‘பிள்ளையார் சுழி போட்டாச்சு’ என்றார். ஆனால் இப்போது பிள்ளையார் சுழி இல்லை… வேறு சுழி போட்டுவிட்டார்கள். எல்லோரின் முதுகிலும் ஏறி சவாரி செய்யலாம் என்று சிலர் கனவு கண்டார்கள். ஆனால் மக்களின் சக்தி விஜய்யை தமிழ்நாட்டின் முதலமைச்சராக அமரவைக்கும்,” என விமர்சித்தார்.
மேலும்,“ஒவ்வொரு கிராமத்திலும் விஜயை பார்க்க மக்கள் திரண்டிருக்கிறார்கள். குழந்தைகள் கூட பெற்றோரிடம் விஜய்க்கு வாக்கு போடச் சொல்லும் அளவுக்கு பிரபலமாக உள்ளது தவெக. ஆண்டுகாலமாக அதே கட்சிகள் தான் ஆட்சி செய்யணுமா? புதியவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கக் கூடாதா?” என்று கேள்வி எழுப்பினார்.
தன்னை யாராலும் சாய்க்க முடியாது என்றும், சாய்க்க நினைப்பவர்களே சாய்ந்து போவார்கள் என்றும் செங்கோட்டையன் சவால் விடுத்தார்.
தவெக சின்னம் வெளியாகவிருக்கும் தகவல் மற்றும் செங்கோட்டையனின் கூற்றுகள், தேர்தலை முன்னிட்டு புதிய அரசியல் கலகலப்பை உருவாக்கி உள்ளன.
English Summary
The entire country will be amazed by the Tvk symbol Do you know what the symbol is Sengottaiyan suspense